டெண்டர் வழக்கு.. ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்றம்! ஷாக்கில் 5 நிறுவனங்கள்! திரும்பும் எஸ்பி வேலுமணி
சென்னை: அதிமுக ன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்கில் தொடர்புடைய நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை 6 வாரத்துக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இதில் டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.பொன்னி ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கை கை விடுவது என அரசு முடிவு செய்தது. அதன்பிறகு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்தது. அதிமுகவிடம் இருந்து திமுக ஆட்சியை பிடித்தது.

இதையடுத்து எஸ்பி வேலுமணிக்கு எதிராக டெண்டர் முறைகேடு தொடர்பாகவும், வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும் குற்றம்சாட்டி இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதில் டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கு ரத்து செய்யப்பட்டது. நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.எம்.டி.டீக்காராமன் அடங்கிய அமர்வு, டெண்டர் பணிகளில முறைகேடு தொடர்பான புகாரில் வேலுமணி மீதான வழக்கை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் எஸ்பி வேலுமணி நிம்மதியடைந்தார்.
இந்நிலையில் தான் டெண்டர் முறைகேடு வழக்கில் தொடர்புடை 5 நிறுவனங்கள் தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என தனித்தனியாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். எம்.எஸ். கன்ஷ்ட்ரக்சென் இன்ஃப்ரா லிமிடெட், ஆலம் கோல்டு, ஆலயம் ஃபவுண்டேஷன், வைதூரியா ஹோட்டல் மற்றும் கண்ஷ்ட்ரோ மால் ஆகிய நிறுவனங்கள் தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அதில் எஸ்பி வேலுமணி பொது ஊழியர். அவருக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை. இதனால் டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்து இருந்தனர். இதற்கிடையே 5 நிறுவனங்கள் மனுக்களுக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. அரசு தரப்பில் இறுதி விசாரணை முடிந்துள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரித்தார். அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், இந்த நிறுவனங்களுக்கு முறைகேட்டில் தொடர்புள்ளது என்றும் ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்தார். அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தயாராக இருப்பதாக கூறினார்.
இதையடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது எனக்கூறிய நீதிபதி 5 நிறுவனங்கள் மீதான டெண்டர் வழக்கை ரத்து செய்ய மறுத்து உத்தரவிட்டதோடு, அந்த நிறுவனங்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார். மேலும் வழக்கில் 6 வாரத்தில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications