ஆந்திரா,தெலுங்கானாவுக்கு ஆக்சிஜன்- அன்று கொந்தளித்த விஜயபாஸ்கர்- ஹைகோர்ட்டில் இன்று தமிழக அரசு பல்டி
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் மற்றும் ரெம்டிசிவர் மருந்துகள் பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக பிற்பகல் விளக்கம் அளிக்க வேண்டும் என தமி
சென்னை: தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை எனவும் ரெம்டெசிவர் மருந்து கையிருப்பு உள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்துகள் தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக பிற்பகல் விளக்கம் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அரசு இந்த விளக்கத்தை அளித்துள்ளது. மருத்துவ பதற்ற நிலை தமிழகத்தில் எதுவும் இல்லை எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல மாநிலங்களில் போதுமான படுக்கை மற்றும் ஆக்சிஜன் இன்றி தடுமாறி வருகின்றன. தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. தினசரியில் 12ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னை ஸ்ரீபெரும்புத்தூரில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. ஆந்திரா, தெலுங்கானாவை விட தமிழ்நாட்டில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டது அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

ஆலோசிக்காமல் ஆக்சிஜன் அனுப்பிய அரசு
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பும் முடிவு தொடர்பாக மத்திய அரசு மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்கவில்லை என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போதைக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். ஆக்சிஜன் சப்ளை விவகாரம் பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் முறையிடப்படும் என்று கூறியுள்ளார்.

பரபரப்பு செய்தி
கொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாக உள்ள நிலையில் குஜராத் போன்ற மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், தமிழகத்தில் ரெம்டிசிவர் மருந்துகள் தனி நபர்களுக்கு வழங்கப்படுவதாகவும், ஆக்சிஜன் உற்பத்தி போதுமான அளவிற்கு உள்ள நிலையில், அதனை தமிழக அரசின் அனுமதி பெறாமல் வெளி மாநிலங்களுக்கு அனுப்படுவதாகவும், வெண்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளதாகவும் தொலைக்கட்சிகள், நாளிதழ்களில் செய்தி வெளியாகி இருந்தது.

வழக்கு விசாரணை
இந்த செய்தியை அடிப்படையாக கொண்டு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து பொது நல வழக்காக விசாரணைக்கு எடுத்தது. தமிழகத்தில் ஆக்சிஜன் மற்றும் ரெம்டிசிவர் மருந்துகள் பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். தமிழகத்திற்குத் தேவையான அளவு ஆக்சிஜன் கையிருப்பு உள்ளதா என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் கேட்டார்.

விசாரிப்பது
மற்ற மாநிலங்களில் உள்ள நிலை தமிழகத்துக்கும் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே தற்போதைய நிலை குறித்து அறிய விரும்புவதாக தெரிவித்தார். மேலும், தற்போதைய சூழலில் மேலும் குழப்பம் ஏற்படுத்துவதற்காக இந்த வழக்கை தாமாக முன் வந்து எடுக்கவில்லை எனவும் நீதிபதிகள் தெளிவு படுத்தினார்.

விளக்கம் கொடுத்த அரசு
இந்த வழக்கு குறித்து தமிழக அரசிடம் விளக்கம் பெற்று, இன்று பிற்பகல் தெரிவிக்கும்படி அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதனையடுத்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் மருந்து பற்றாக்குறையோ மருத்துவ பதற்ற நிலையோ எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது.

பற்றாக்குறை இல்லை
தமிழகத்தில் ரெம்டெசிவர் மருந்து அரசு மருத்துவமனைகளில் 31000 பாட்டில்கள் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையோ வெண்டிலேட்டர் பற்றாக்குறையோ இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இருந்து ரெம்டெசிவர் மருந்துகளை அரசிடம் கேட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அந்தர் பல்டி
ஏற்கனவே தமிழகத்துக்கான ஆக்சிஜன், ஆந்திரா - தெலுங்கானாவுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்தது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரtத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்துக்கு ஆக்சிஜன் தேவை உள்ள நிலையில் பிற மாநிலங்களுக்கு எப்படி அனுப்பலாம் என கொந்தளித்திருந்தார். ஆனால் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில், அப்படி ஆக்சிஜனை ஆந்திரா, தெலுங்கானாவுக்கு கொண்டு சென்றதால் எந்த பாதிப்பும் இல்லை என தமிழக அரசு அப்படியே அந்தர் பல்டி அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications