சென்னை ஐகோர்ட் வளாகத்துக்குள் வெடிகுண்டு வெடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? நீதிபதிகள் கேள்வி!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கொண்டு வரப்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து பரிந்துரைகளை அளிக்க தமிழ்நாடு காவல்துறை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை மற்றும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் எப்படி கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பான விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதனைப் படித்த நீதிபதிகள், இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இந்த விவகாரத்திற்கு பின்னர் உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் பாதுகாப்பை பலப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு வழக்கறிஞர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வருபவர்களை சோதனையிடுவது என்பது உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், வெடிகுண்டு எதுவும் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்படவில்லை எனவும் அது தவறான குற்றச்சாட்டு எனவும் வாதிட்டனர்.
இதனையடுத்து நீதிபதிகள், உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்ட வெடிகுண்டு வெடித்திருந்தால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதை நாம் யோசிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள் இது அனைவரின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என தெரிவித்தனர்.
எனவே பாதுகாப்பை பலப்படுத்துவது முக்கியமானது எனக்கூறிய நீதிபதிகள் இது குறித்து தமிழ்நாடு காவல்துறை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை மற்றும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியோர் தங்களது பரிந்துரைகளை அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நாளை மறுநாளுக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்தனர்.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications