விஜய்யின் எலும்பை உடைப்பேன்னு சொன்ன திமுக எம்எல்ஏ மார்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய் சட்டசபைக்கு வந்தால் அவரது எலும்பை உடைப்பேன் என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்கண்டேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இனி மேல் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசமாட்டேன் என உத்தரவாதம் வழங்க நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார். மேலும் தினந்தோறும் தூத்துக்குடி காவல் நிலையத்தில் மார்கண்டேயன் கையெழுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

markandeyan vilathikulam

வரும் 5ஆம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் என்பதால் சட்டசபை கூட்டத் தொடர் நாட்களில், மார்கண்டேயன், தூத்துக்குடி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டியில் நடந்த கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் ,"சட்டசபையை கூட்டட்டும், விஜய்யின் எலும்பை உடைப்போம்" என விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்கண்டேயன் மிரட்டல் விடுத்தார்.

இதற்கு கண்டனங்கள் வலுத்த நிலையில் கடந்த ஜூலை 20ஆம் தேதி காலை மார்கண்டேயன் கைது செய்யப்பட்டார். அவர் எஸ்பி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 11 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் மார்க்கண்டேயனை அன்று இரவில் தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சுமதி முன்பு ஆஜர்படுத்திய நிலையில் அவரை, ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை 15 நாட்கள் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து மார்க்கண்டேயன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மார்கண்டேயனுக்கு ஜாமீன் கோரி, அவரது வழக்கறிஞர்கள் தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

அது போல் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல் துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை நீதிபதி சுமதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். அப்போது முதல்வர் குறித்து மிக கடுமையான வகையில் மிரட்டல் விடுத்து பேசியிருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என காவல் துறை தரப்பு வாதிட்டது.

இதையடுத்து நீதிபதி சுமதி, மார்கண்டேயனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கடந்த ஜூலை 23 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு மீது நீதிபதி இளந்திரையன் விசாரணை நடத்தினார். அப்போது அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மார்கண்டேயனின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால் அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+