கூகுளில் ஆபாச விளம்பரங்களுக்கு தடை கோரிய வழக்கு! குழந்தைகள் பார்க்கிறாங்க! விளக்கம் கோரிய கோர்ட்
சென்னை: கூகுளில் ஆபாச விளம்பரங்களுக்கு தடைவிதிக்க கோரிய வழக்கில் மத்திய அரசு, கூகுள் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூகுள் இணையத்தில் ஆபாச வலைத்தளங்களுக்கான பரிந்துரைகள் வருவதற்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஞானேஸ்வரன் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், இணைய பயன்பாட்டாளர்கள் கூகுள் தேடுதலில் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்து சில தனியார் நிறுவனங்கள் தங்களது விளம்பரத்தை பிரபலபடுத்தும் வசதியை கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது. இதை சில தவறான நபர்கள் ஆபாச இணையதளங்களுக்கான பரிந்துரைகளை விளம்பரப்படுத்துகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆபாச புகைப்படங்கள் கொண்ட விளம்பரங்கள் இணையதளத்தை பயன்படுத்துவோருக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்துகிறது எனவும், குழந்தைகள் தவறான பாதைக்கு செல்லும் அபாயம் உள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, கூகுள் நிறுவனமும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சகம் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.
அது போல் மற்றொரு வழக்கில் யூ டியூப் சேனல்களை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யூடியூப்களை கட்டுப்படுத்த எந்த நடைமுறையும் இல்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், குற்ற வழக்குகளில் யூடியூப் சேனல்கள் ஊடக விசாரணை நடத்துவதால் காவல் துறையினரின் புலன் விசாரணை பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூடியூப் சேனல்கள் பதிவுகளை முறைப்படுத்த எந்த நடைமுறையும் இல்லாததால் பொது அமைதி பாதிக்கப்படுவதால் யூடியூப் சேனல்களை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications