Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Isha Yoga: கோவை ஈஷா அறக்கட்டளையில் தகன மண்டபம்! தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? ஹைகோர்ட் கேள்வி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் தகன மண்டபம் கட்டப்பட்டது தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில், காலபைரவர் தகன மண்டபம் என்ற பெயரில் மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு, நீர்நிலைகள் பகுதியில் இந்த தகன மேடை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதை அகற்ற உத்தரவிட வேண்டும் என இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.என்.சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

coimbatore isha kovai

இதே போல் அதேபகுதியைச்சேர்ந்த ஆதிவாசிகள் முருகம்மாள் உள்ளிட்டோரும் தகன மேடை அமைக்கப்படுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர். செம்மேட்டைச் சேர்ந்த சிவஞானன் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில் கடந்த 2024-ம் ஆண்டு ஈஷா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற சிவராத்திரி விழாவின்போது அருகில் உள்ள தனது தோட்டத்திற்குள் கழிவு நீர் வெளியேற்றப்பட்டதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஈஷா யோக மையத்திற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்-எம்.சுப்ரமணியன்,ராஜசேகர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பஞ்சாயத்து உரிமம் பெற்று தகன மேடை அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட உள்ளதாகவும் இதே போல் பல இடங்களில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் ஈஷா அறக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் புருஷோத்தமன், மற்ற இடங்களில் ஏற்கனவே உள்ள தகன மேடைகளை பராமரிக்கப்பட்டு வருவதாகவும் ஆனால் இங்கு அவர்களே கட்டி பராமரிப்பதாகவும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், அரசு மற்றும் தனியார் சார்பில் கட்டப்படும் தகன மேடைகளை பராமரிப்பது தொடர்பாக ஏதேனும் விதிமுறைகள் உள்ளதா என கேள்வி எழுப்பினர்.

மேலும் ஈஷா யோகா மையத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள தகனமேடை தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வன அதிகாரி ஆகியோர் இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+