முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் நோட்டீஸ் ரத்து! சம்மன் அனுப்பி விசாரிக்க கோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் அவர் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் பணிகளே நடைபெறாத நிலையில் முன்கூட்டியே தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு கோடிக்கணக்கில் தொகை விடுவிக்கப்பட்டு முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் கடந்த 2022 ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.

ev velu

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் வேலு, துறை அதிகாரிகள், தனியார் ஒப்பந்ததாரர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 25 ஆம் தேதி எ.வ.வேலுவின் வீடு, அலுவலகம், அவருக்கு சொந்தமான இடங்களில் எல்லாம் சோதனை நடத்தினர். இதையடுத்து கடந்த ஜூன் 26ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார் வேலு.

இந்த நிலையில் அவர் தேடப்படும் நபராக அறிவித்து போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். இதையடுத்து நெடுஞ்சாலை துறை வழக்கையும் தனக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸையும் ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 13 ஆம் தேதி எ.வ.வேலு மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் ஜூலை 27ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் இதுவரை லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்கவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் இன்றைய தினம் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்தார். மேலும் வேலு வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் நீதிமன்ற அனுமதியை பெற வேண்டும். அவருக்கு சம்மன் அனுப்பி புலன் விசாரணையை தொடரலாம். ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் லஞ்ச ஒழிப்புத் துறை விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+