வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? சென்னை மக்களே இன்று கடைசி வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க
சென்னை: தமிழ்நாடு முழுவதும் சமீபத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இந்நிலையில் இந்த பட்டியலில் பெயர் விடுபட்டிருப்பவர்களுக்கு சென்னையில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இன்று இரண்டாவது நாளாக இந்த முகாம் நடைபெறுகிறது.
பெயர் விடுபட்டவர்கள், முகாமில் பங்கேற்று படிவம்-6ஐ சமர்பிக்க வேண்டும். சென்னையில் அதிக அளவில் வாக்காளர்கள் விடுபட்டிருந்தார்கள் என்பதால், அதிக அளவில் மக்கள் முகாமில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் வாக்காளர் எவ்வளவு?
தமிழ்நாடு முழுவதும் எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்து, வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியாகியிருந்தது. இதில் மாநிலம் முழுவதும் 97 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். அதிகபட்சமாக சென்னை மாவட்டத்திற்குள், 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டு இருந்தனர்.
- சென்னையில் முன்பு இருந்த வாக்காளர்கள் - 40,04,694
- சென்னையின் தற்போதைய வாக்காளர்கள் - 25,79,676
- நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 14,25,018 (35.58%)
- நீக்கப்பட்ட வாக்காளர்களில் உயிரிழந்தவர்கள் - 1.56 லட்சம் பேர்
- முகவரியில் இல்லாதவர்கள் - 27,328 பேர்
- குடி பெயர்ந்தோர் - 12,22,164
- இரட்டை பதிவில் வசிப்போர் - 18,772
சிறப்பு முகாம்கள்
சென்னை மாவட்டத்தில் மட்டும் 16 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன இதில் 1.56 லட்சம் பேர் இறந்தவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. அதாவது மொத்தம் உள்ள வாக்காளர்கள் மூன்றில் ஒரு பகுதி வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில், புதிய வாக்காளர்களாக சேர்பவர்களுக்கு சிறப்பு முகம் நேற்றும் இன்றும் நடைபெற்று வருகிறது. வார்டு வாக்காளர் பதிவு அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்கள் என 3,718 இடங்களில் இந்த முகாம்கள் நடைபெறுகின்றன.
ஆர்வல் காட்டவில்லை
சிறப்பு முகங்களில் ஓரிடத்தில் தலா 3 பேர் என, தேர்தல் உதவி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, புதிய வாக்காளர் படிவங்கள் விநியோகிக்கப்பட்டு பூர்த்தி செய்து, வாக்காளர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு திரும்ப பெறப்பட்டு வருகின்றன. புதியதாக வாக்காளர்களாக சேர விருப்பம் இருப்பவர்கள், படிவம் 6-ஐ சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் சென்னையில் புதியதாக வாக்காளர்களாக தங்களை இணைத்துக் கொள்ள மக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இன்றுடன் இந்த சிறப்பு முகாம் நிறைவடையும் நிலையில் வாக்காளர்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
மாற்று வழி என்ன?
இந்த முகாமில் பங்கேற்க முடியவில்லை எனில், https://voters.eci.gov.in/login என்கிற இணையதளத்தில் ஆன்லைன் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். உங்களுடைய மொபைல் எண்ணை கொடுத்து லாகின் செய்யவும். உள்ளே நுழைந்ததும் new registration for general electros form 6 என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இது புதிய வாக்காளர்களுக்கும் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்கும் உரிய படிவமாகும்.
படிவத்தில் மாநிலம், மாவட்டம் மற்றும் தொகுதி வசிப்பிடத்திற்குரிய தகவல்களை கொடுக்க வேண்டும். அதேபோல தனிப்பட்ட விவரங்கள் அதாவது, பெயர், தந்தை பெயர், கணவர் பெயர், பாலினம் போன்றவையும் கொடுக்க வேண்டும். பின்னர் தற்போது வசிக்கும் முழுமையான முகவரியை கொடுக்க வேண்டும்.
என்னென்ன தேவை
இதனையடுத்து ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதாவது, சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், வயதுக்காக பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு அல்லது பத்தாம் வகுப்பு சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றை அப்லோடு செய்ய வேண்டும். கடைசியாக முகவரி சான்றுக்காக ஆதார் அட்டை அல்லது மின் கட்டண ரசீது, கேஸ் ரசீது, வங்கி கணக்கு புத்தகம் அல்லது பாஸ்போர்ட் இப்படி ஏதாவது ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து விவரங்களையும் சரிபார்த்து preview and submit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இப்படி செய்தவுடன் விண்ணப்ப எண் வழங்கப்படும். இதை வைத்து உங்களின் விண்ணப்ப நிலையில் இணையதளத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம்.
-
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை












Click it and Unblock the Notifications