ஐஸ் ஹவுஸில் அம்மா கண்முன்னே தெறித்த மகனின் "மூளை".. அந்த 2 பெண்கள் யார்? வலி மாத்திரை பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் வீட்டு வாசலில் தன்னுடைய அம்மாவுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தாராம் அஜித்.. அப்போதுதான் தாயின் கண்முன்னேயே, அரிவாளால் ஒரு கும்பல் மகனை வெட்டி சாய்த்துள்ளது.. சென்னையில் இந்த கொலை நடந்துள்ளது.. இதற்கான காரணங்கள் என்ன? பின்னணி என்ன? என்பது குறித்த விசாரணையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.

ஐஸ் ஹவுஸ், அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் அஜித்... இவர் ஏர்டெல் நிறுவனத்தில் டெக்னீஷியனாக வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு வீட்டு வாசற்படியில் உட்கார்ந்து, தன்னுடைய அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

Chennai Ice House

சென்னை ஐஸ் ஹவுஸ் அஜித்

அப்போது அஜித்தை 2 பெண்கள் சந்திக்க வந்திருக்கிறார்கள்.. தனியாக பேச வேண்டும் என்று சொல்லி, அஜித்தை அதே வாசல் பகுதிக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.. அப்போது அங்கு 2 மர்ம நபர்கள் வந்து, கையில் கொண்டு வந்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் அஜித்தை முகம், தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் மூளை தெறித்து தனியாக விழுந்ததாம்.. இதில் பலத்த காயமடைந்த அஜித் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தன் கண் முன்னாடியே மகனை வெட்டுவதை பார்த்து, தாய் சரசம்மாள் கதறி ஓடியிருக்கிறார்.. ஆனால், சரசம்மாவுக்கும் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது... சம்பவத்தை பார்த்த குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். தகவல் கிடைத்ததும் ஐஸ் ஹவுஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அஜித்தின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்த சரசம்மாவுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

வலி மாத்திரை தந்த கதி

பிறகு இந்த கொலைக்கான காரணம் குறித்த விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போதுதான் இது பழிக்குப்பழி வாங்க நடந்த கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பியது.. அதாவது கடந்த 2017-ம் ஆண்டு அஜித்துக்கும், ஹரிஷ் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம், தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.. ஹரிஷ் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரும் சேர்ந்துதான், அஜித்தை கொன்றிருக்கலாம் என்று, நேரில் சம்பவத்தை பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் தேடி வந்த நிலையில், ஹரிஷை கைது செய்துள்ளனர். இவர் "A" பிரிவு குற்றவாளி என்றும் கூறப்படுகிறது. தப்பியோடிய ராஜேஷை போலீசார் தீவிரமாக தேடி கொண்டிருக்கிறார்கள்.. மேலும்., சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள், அங்கிருந்தவர்களின் தகவல்கள், சிசிடிவி காட்சிகளையும் வைத்து போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

பழிக்குப் பழி?

அதேசமயம், இந்தக் கொலைக்கு 2017-ம் ஆண்டு முதல் இருந்த முன்விரோதம் மட்டும்தான் காரணமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அஜித், ஹரிஷ் இருவருமே கஞ்சா விற்று வந்திருக்கிறார்கள்.. போதை மாத்திரை விற்பனையில் யார் பெரியவர் என்ற போட்டியும் இவர்களுக்குள் இருந்து வந்துள்ளது.. அந்தப் போட்டியால் ஏற்பட்ட முன்விரோதம்தான், இப்போது கொலை வரை வந்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அஜித்துக்கும் ஹரிஷ் உள்ளிட்டோருக்கும் இடையிலான பழைய பிரச்சனை, கஞ்சா விற்பனை தொடர்பான போட்டி என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்கள் 2 பேருமே வலி நிவாரணி மாத்திரைகளை, போதை மாத்திரைகளாக விற்று வந்தார்களாம். அப்படியானால் இந்த மாத்திரைகள் எல்லாம் இவர்களுக்கு எப்படி, எங்கே கிடைத்திருக்கும் என்று தெரியவில்லை.

யார் அந்த 2 பெண்கள்

அதேபோல, அம்மாவுடன் வீட்டின் வாசலில் இருந்தபோதே அஜித்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த கொலையில், அவரை வெளியே அழைத்த 2 பெண்கள் யார் என்று தெரியவில்லை.. கொலையாளிகளுக்கும், அந்த 2 பெண்களுக்கும் என்ன தொடர்பு என்றும் தெரியவில்லை.. 2017-ம் ஆண்டு தொடங்கிய பகை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு கொலையில் முடிந்தது ஏன்? என்பதற்கான பதில்களையும் போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், இந்த கொலையானது, தலைநகரில் மிகுந்த பரபரப்பை தந்துள்ளது.. ஏற்கனவே மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "தமிழ்நாட்டில் இந்த 5 மாதங்களில் 500 கொலைகள் நடந்ததுதான் தவெகவின் சாதனை... அண்ணன், தம்பி, தாய்மாமன், பெண்களுக்கு பாதுகாவலன் என்றெல்லாம் பேசும் முதல்வர், பெண்களுக்கு என்ன பாதுகாப்பு கொடுத்தார்"எனச் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது எனக் குற்றம்சாட்டியிருந்தார்...

தவெகவுக்கு தலைவலி

எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து இதேக் கேள்வியை எழுப்பி வரும்நிலையில்தான், இந்த ஐஸ் ஹவுஸ் கொலை நடந்துள்ளது. திமுக எம்.பி கனிமொழி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.. முதலமைச்சர் விஜய் திமுகவை விமர்சிக்க Script-ஐ மனப்பாடம் செய்வதில் காட்டும் அக்கறையைத் தன்வசமுள்ள காவல்துறையைச் செயல்படுத்துவதில் கொஞ்சம் காட்டியிருந்தால் கூட இதுபோன்ற சம்பவங்களைத் தடுத்திருக்கலாம். இனியாவது செய்வாரா?" என்றும் கனிமொழி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தேர்தல் களம் பரபரப்பாக இருக்கும் நேரத்தில் எழுந்துள்ள இந்த விவகாரம், தவெகவுக்கு புதிய தலைவலியாக மாறுமா? அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில்தான் இதற்கான பதில் தெரியவரும்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+