சென்னை ஐஸ் ஹவுஸ் இளைஞர் கொலை.. 4 பேர் கைது.. நடுங்க வைக்கும் போதை பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதாக தவெக பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தது. ஆனால் தவெக ஆட்சியிலும் சட்டம் ஒழுங்கு சரியாகவில்லை. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம் அதிகமாக உள்ளது. சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் கஞ்சா விற்பனையில் நடந்த போட்டி காரணமாக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் அஜித். வயது 28. இவர் நேற்று முன்தினம் தன்னுடைய வீட்டு வாசிலில் அமர்ந்து அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அஜித்தை தாக்கியுள்ளனர். கொடூரமான ஆயுதங்களால் தாக்கி சென்றுள்ளனர். அருகில் இருந்தவர்கள் மீட்டு அஜித்தை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறினர்.

Ganja Murder

ஐஸ் ஹவுஸ் கொலை

இதுகுறித்து ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சின்ன ஹரிஷ், பெரிய ஹரிஷ், போண்டா ராஜேஷ், சஞ்சய் ஆகிய இளைஞர்கள் அஜித்தை கொலை செய்தது தெரியவந்துள்ளது. அந்த பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகம் உள்ளது. கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது. அஜித் கும்பலுக்கும், ஹரிஷ் கும்பலுக்கும் நீண்ட காலமாக முன்பகை இருந்தது.

போண்டா ராஜேஷ் என்பவரை, அஜித் தன் நண்பர்களுடன் இணைந்து கொலை செய்ய முயற்சித்தார். ராஜேஷ் காயங்களுடன் தப்பித்தார். போதை மாத்திரை விற்பனையில் ஹரிஷ், ராஜேஷ் இடையே பிரச்சனை வெடித்தது. இதனால் ராஜேஷ், ஹரிஷ் இணைந்து அஜித்தை கொலை செய்ய முடிவு செய்தனர். அம்மாவின் கண் முன்பே இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சட்டம் ஒழுங்கை காக்க மறந்த தமிழக அரசை பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டித்தனர்.

4 பேர் கைது

இதனை தடுக்க சென்ற அவரின் அம்மாவையும் வெட்டி காயப்படுத்தினர். நேற்று ஹரிஷ் கைது செய்யப்பட்டார். மற்றவர்கள் தலைமறைவாகினர். அவர்களையும் காவல்துறையிர் கைது செய்து எக்மோர் கோர்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் அடிப்படையில் 4 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனனர். விரைவில் அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+