Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போக்குவரத்து டென்ஷன் இனி வேண்டாம்! சென்னையில் விரைவில் வருகிறது Air Taxi! இனி பறந்தே செல்லலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், அதைத் தீர்க்கும் வகையில் புதிய வகை டாக்ஸி நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைநகர் சென்னையில் இருக்கும் டிராபிக் குறித்து யாருக்கும் சொல்லத் தேவையில்லை. அதிலும் பீக் ஹவர்ஸ் எனப்படும் அலுவலகம் சென்று திரும்பும் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் உச்சத்தில் இருக்கும்.

அந்த சமயங்களில் ஓரிரு கிலோமீட்டர் செல்லவே சில மணி நேரம் கூட ஆகும். மேலும், அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் நேரடியாகக் காற்று மாசையும் ஏற்படுத்துகிறது.

 பறக்கும் டாக்ஸி

பறக்கும் டாக்ஸி

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. அவசர அவசரமாகச் செல்லும்போது, டிராபிக்கில் சாலையில் நிற்க வேண்டிச் சூழல் ஏற்படும் போது, "அடசே, டிராபிக் தொல்லை இல்லாமல் பறந்து போன எப்படி இருக்கும்!" என்று தான் நம்மில் பெரும்பாலானோருக்குத் தோன்றும். இந்த கனவு கூடிய விரைவில் நனவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 எந்த நிறுவனம்

எந்த நிறுவனம்

சென்னை ஐஐடியை சேர்ந்த பேராசிரியர் சத்ய சக்கரவர்த்தி மற்றும் ஐஐடி முன்னாள் மாணவர் பிரஞ்சல் மேத்தா ஆகியோர் தொடங்கிய ePlane என்ற நிறுவனம் இந்த பறக்கும் டாக்ஸக்கான prototype எனப்படும் முன்மாதிரியை விரைவில் தொடங்க உள்ளது. e200 என்று அழைக்கப்படும் இந்த மின்சார வாகனம், 2023இல் சரக்கு சேவையையும் 2024இல் பயணிகள் சேவையையும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 குட்டி விமானம்

குட்டி விமானம்

e200 என்ற இந்த மாடல் இரண்டு இருக்கைகள் கொண்ட எலக்டிரிக் விமானமாகும். 200 கிலோ எடை கொண்ட இந்த விமானத்தால் தரையில் இருந்து செங்குத்தாகப் பறக்க முடியும். அதேபோல செங்குத்தாக இறங்கவும் செய்யும். இந்த விமானம் ஒறு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 200 கிமீ தூரம் செல்லும். மேலும், இந்த விமானம் இரண்டு ப்ரொப்பல்லர் செட்களை கொண்டுள்ளது.

 சார்ஜிங்

சார்ஜிங்

மேலும், மின்சார வாகனங்களுக்கான வழக்கமான சார்ஜிங் முறைகளைப் பயன்படுத்தி இந்த விமானத்தை சார்ஜ் செய்யலாம். அதுமட்டுமின்றி ஃபிளாஷ் சார்ஜிங் முறையிலும் இதை சார்ஜ் செய்யலாம். தற்போது, ​​இந்த e200ஐ அசெம்பிள் நிலையில் உள்ளது.. வடிவமைப்பு அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ePlane மாடல் விரைவில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 கச்சிதமான விமானம்

கச்சிதமான விமானம்

உலகிலேயே மிகவும் கச்சிதமான மின்சார வாகனங்களை (பறக்கும் டாக்சிகள்) உருவாக்குவதே தங்கள் லட்சியம் என்றும் அனைத்து கட்டிடத்தின் கூரைகளில் தரையிறங்கிக் கிளம்பும் வகையில் தங்கள் வாகனத்தை வடிவமைப்பதாக நிறுவனத்தின் இணை நிறுவனர் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். ePlane நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்கனவே $5 மில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்றுள்ளது.

 நோக்கம்

நோக்கம்

இது குறித்து அந்நிறுவனம் கூறுகையில், "குறைந்த விலையில், இதைச் சாத்தியப்படுத்த அதிக மைலேஜ், எளிதில் ஒப்புதல் பெறும் தயாரிப்பு தேவை. அனைவரும் பயன்படுத்தக் கூடிய வகையில் இதை நாங்கள் வடிவமைக்கிறோம். இதன் மூலம் மக்கள் விரைவாகப் பயணித்து, நேரத்தைக் கணிசமாக மிச்சப்படுத்த முடியும். அனைத்து மக்களும் குறைந்த விலையில் எங்கள் சேவையைப் பயன்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்" என்று கூறப்பட்டுள்ளது.

 இதர விமானங்கள்

இதர விமானங்கள்

இந்த நிறுவனம் ஏற்கனவே முன்னதாக e6 எனப்படும் ஒரு சிறிய மின்சார விமானத்தை உருவாக்கியுள்ளது. இது 6 கிலோ எடையை 80 கிலோமீட்டர் வரை சுமந்து செல்லும். இது நகரில் சரக்கு போக்குவரத்துக்கு ஏற்றதாக இருக்கும். அதேபோல e50 எனப்படும் 50 கிலோ எடையை சுமந்து செல்லும் விமானத்தையும் இது ஏற்கனவே வடிவமைத்துள்ளது. e200 வடிவமைப்பு பணிகள் முடிந்ததும், தரையிறங்க மற்றும் புறப்பட ஏற்றதாக இருக்கும் கட்டிடங்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+