அசத்திய சென்னை ஐஐடி.. சிறந்த கல்வி நிறுவனங்களில் பட்டியலில் நாட்டிலேயே முதலிடம்!
சென்னை: 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தை பெற்று தமிழகத்திற்கு பெருமை தேடி தந்துள்ளது. அதைத் தொடர்ந்து பெங்களூரு ஐஐடி 2ஆம் இடமும் டெல்லி ஐஐடி 3ஆம் இடமும் பிடித்திருக்கிறது.
அடுத்தடுத்து மும்பை, கான்பூர் ஐஐடி 4 மற்றும் 5வது இடங்களையும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி 6ஆவது இடத்தை பெற்றுள்ளது. இதற்கடுத்ததாக 7,8,9 என வரிசை முறைப்படி காரக்பூர், ரூர்கே, கவுகாத்தி ஆகிய ஐஐடி முதல் 10 இடங்களில் இடமெற்றுள்ளன.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 10வது இடத்தை பெற்றிருக்கிறது. இதனிடையே சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றிருப்பது குறித்து கூறும் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, முதலிடத்தை பெறுவது என்பது எளிது, ஆனால் அதனை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும் என்பது கடினமானதாகவும், சவால் நிறைந்ததாகவும் இருக்கும் எனக் கூறியிருக்கிறார்.
சிறந்த கல்வி நிறுவனங்கள் லிஸ்டில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றிருப்பது தங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும் என்ற ஊக்கத்தையும் தருவதாக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்திருக்கிறார்.
மேலும், மாணவர்கள், பேராசிரியர்கள், மத்திய உயர்கல்வித்துறை, தமிழக அரசு என அனைத்து தரப்பினரின் பங்களிப்பும் இந்த வெற்றியில் இடம்பெற்றிருப்பதாக காமகோடி தெரிவித்திருக்கிறார். சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 5வது முறையாக சென்னை ஐஐடி முதலிடம் பெற்றிருப்பதாக அவர் பெருமிதம் தெரிவித்டிருக்கிறார்.
இதன் மூலம் இந்த தேசத்திற்காக சென்னை ஐஐடி இன்னும் கூடுதலாக உழைக்கும் என்றும் இன்னும் பல அரிய சாதனைகளை நிகழ்த்தும் எனவும் நம்பிக்கை பொங்க தெரிவித்திருக்கிறார். தங்களிடம் அர்ப்பணிப்பு மிக்க டீம் உள்ளதாகவும் 2 மாதங்களுக்கு ஒரு முறை செயல்திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதாலும், திருத்துவதாலும் தங்களால் முதலிடத்தை தக்க வைக்க முடிவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications