‛2028ல் அறிமுகம்’.. மசாலா பொருட்களில் இருந்து புற்றுநோய்க்கு மருந்து! அசத்தும் சென்னை ஐஐடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நுரையீரல், மார்பகம், பெருங்குடல், கர்ப்பப்பை, வாய் உள்ளிட்ட புற்றுநோய்களுக்கு மருந்தை இந்திய மசாலா பொருட்களில் இருந்து கண்டுபிடிக்கும் ஆய்வில் சென்னை ஐஐடி ஆர்வம் காட்டி வருகிறது. வரும் 2028ல் புற்றுநோய் தடுப்பு மருந்துகளை அறிமுகம் செய்யும் வகையில் மருத்துவ பரிசோதனைகளை தொடங்கி விரைவுப்படுத்தப்பட உள்ளது.

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் வெவ்வேறு வகையான புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு புற்றுநோயை குணமாக்க இன்னும் மருந்து என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. மாறாக புற்றுநோயின் தாக்கத்தை குறைக்கும் வகையில் மட்டுமே மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Chennai IIT researchers patent use of Indian spices to treat cancer; clinical trials to begin soon

இந்நிலையில் தான் பல்வேறு நாடுகள் சார்பில் அனைத்து வகையான புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் வகையில் மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி என்பது தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் சென்னை ஐஐடி சார்பில் புற்றுநோய் மருந்து தொடர்பான ஆராய்ச்சி தொடங்கி உள்ளது.

அதாவது புற்றுநோய்க்கு இந்திய மசாலா பொருட்களை பயன்படுத்தி மருந்து கண்டுபிடிப்பதற்கான காப்புரிமையை சென்னை ஐஐடி பெற்றுள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் பல்வேறு மசாலா பொருட்களில் இருந்து பெறப்பட்ட நானோ மருந்துகள் என்பத நுரையீரல், மார்பகம், பெருங்குடல், கர்ப்பப்பை, வாய், தைராய்டு செல்களில் ஏற்படும் புற்றுநோயை எதிர்த்து செயல்படும் தன்மையை கொண்டுள்ளன. மேலும் இந்த நானோ மருந்துகள் புற்றுநோய் பாதிக்காத இடங்களுக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை என்பது ஆராய்ச்சியின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் புதிய முடிவை எடுத்துள்ளனர். அதாவது தற்போது புற்றுநோயை குணப்படுத்தும் மருந்துக்கான செலவு என்பது அதிகம் உள்ளது. இதனை குறைப்பதோடு, மக்களுக்கு பாதுகாப்பான முறையில் மருந்து கண்டுபிடிக்க முடிவு செய்துள்ளனர். இததொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர். அதன்படி வரும் 2017-2018 ம் ஆண்டுக்குள் இந்திய சந்தைகளில் மசாலாக்களில் இருந்து தயாரிக்கப்பட்ட புற்றுநோய்க்கு எதிரான மருந்துகள் கிடைக்க வேண்டும் என்ற வகையில் ஆராய்ச்சிகள் தொடங்கி உள்ளது.

சமீபத்தில் இந்த நானோ மருந்துகளை விலங்குகளின் உடலில் செலுத்தி மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இது வெற்றி பெற்றது. இதையடுத்து தான் தற்போது மனிதர்களின் புற்றுநோயை குணமாக்கும் மருந்து தொடர்பான மருத்துவ பரிசோதனையை சென்னை ஐஐடி தொடங்க உள்ளது. இந்த ஆராய்ச்சியின் மூலம் வரும் 2018 ம் ஆண்டுக்குள் புற்றுநோய் தடுப்பு மருந்தை அறிமுகம் செய்யும் முனைப்பில் சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதுபற்றி சென்னை ஐஐடியின் கெமிக்கல் என்ஜினீயரிங் துறையின் பேராசிரியரான நாகராஜ் கூறுகையில், ‛‛ இந்திய மசாலா எண்ணெய்களில் மருத்துவ குணங்கள் உள்ளன. இதுபற்றி நாம் அறிந்து இருந்தாலும் கூட அதிகமான பயன்படுத்தப்படாத நிலை தான் உள்ளது. இந்நிலையில் தான் இதுதொடர்பான ஆய்வுகள் ஆய்வகங்களில் நடக்கிறது. விலங்குகள் மீதான ஆய்வின் நேர்மறையான முடிவுகளை மருத்துவ பரிசோதனைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்வோர். இந்த அனைத்த விஷயங்களையும் கடைப்பிடித்து சந்தைக்கு கொண்டு வர குறைந்தது 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலான காலம் பிடிக்கும்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+