நிவர் ராத்திரிதான்.. பகல் எல்லாம் மிரட்டும் போகும் மழை.. எங்கெல்லாம் தெரியுமா?
சென்னை: இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை நிவர் புயல் கரையை கடக்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியது. புயல் கரையை கடக்கும் போது நாகப்பட்டினம் முதல் சென்னை வரை கடலோர பகுதிகளில் மிக கனமழை பெய்யும். இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும் என்பதை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
வங்ககடலில் உருவாகி உள்ள நிவர் புயல் தற்போது கடலூருக்கு கிழக்கு தென்கிழக்கே 290 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 300 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் மெதுவாக நகர்ந்து வருகிறது. அதிதீவிர புயலாக மாறாக 12 மணி நேரம் ஆகும். புயல் கரையை கடக்க இன்று நள்ளிரவுக்கு மேல் ஆகும். இன்று நள்ளிரவு தொடங்கி நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.

புதுச்சேரி முதல் நாகை வரை
நிவர் புயல் காரணமாக இன்று நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிக உச்சகட்ட மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

திருச்சியில் மழை
இதேபோல் திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மறறும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். இதேபோல் சேலம், நாமக்கல் ஈரோடு மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

நாளையும் மழை
நாளை வேலூர், ராணிபபேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ங்க்ளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை முதல் நாகப்பட்டினம் வரை 25ம் தேதி 200 மில்லி மீட்டர் மழை பெய்யும். வாய்ப்பு உள்ளது.

கனமழை பெய்யும்
அதேபோல் தஞ்சை திருவாருர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் 100 மில்லி மீட்டர் முதல் 200 மில்லிமீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ள பகுதிகளில் 60 முதல் 115 மில்லிமீட்டர் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications