பெங்களூர், ஹைதராபாத்தை.. தூக்கி அடித்த சென்னை.. சர்ரென முன்னேறிய நம்ம மெட்ராஸ்.. என்ன நடந்தது?
சென்னை: 2023 ஆம் ஆண்டிற்கான முக்கிய இந்திய நகரங்களில் இன்டஸ்ட்ரியல் & லாஜிஸ்டிக்ஸ் குத்தகை விடுவதில் சென்னை சாதனை படைத்துள்ளது. அதாவது தொழிற்சாலைகள், லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள் குத்தகை விடுவதில் சென்னை முன்னேறி உள்ளது.
2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவில் ஆபிஸ் அப்சார்ப்ஷன் எனப்படும்.. அலுவலகங்களை வாடகைக்கு, குத்தகைக்கு எடுப்பதன் அளவு அதிகரித்துள்ளது. முக்கியமாக சென்னையில் அலுவலகங்களை வாடகைக்கு, குத்தகைக்கு எடுப்பதன் அளவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

நான்கில் ஒரு பங்கிற்கு மேல் பெங்களூரில் அலுவலகங்களை வாடகைக்கு, குத்தகைக்கு எடுத்துள்ளனர். ஆனால் சென்னை 2 மடங்கு வளர்ச்சியை கண்டுள்ளது. 10.5 மில்லியன் சதுர அடி அளவிற்கு அலுவலகங்களை வாடகைக்கு, குத்தகைக்கு சென்னையில் எடுத்துள்ளனர். சென்னையில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு.. மிக அதிக அளவில் 10.5 மில்லியன் சதுர அடி அளவிற்கு அலுவலகங்களை வாடகைக்கு, குத்தகைக்கு சென்னையில் எடுத்துள்ளனர்.
இதன் அர்த்தம் 10.5 மில்லியன் சதுர அடி அளவிற்கு அலுவலகங்களை பல்வேறு ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலை நிறுவனங்கள் வாடகைக்கு, குத்தகைக்கு சென்னையில் எடுத்துள்ளனர். இதன் மூலம் சென்னை முதல் முறையாக முதல் 3 இடங்களுக்குள் வந்தது என்று Colliers India அறிக்கையின்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது.
4.6 மில்லியன் சதுர அடி அளவிற்கு அலுவலகங்களை கொடுத்த சென்னை 10.5 மில்லியன் சதுர அடி அளவிற்கு அலுவலகங்களை கொடுத்துள்ளது. 131 சதவிகிதம் வளர்ச்சியை சென்னை கண்டுள்ளது. 16.2 மில்லியன் சதுர அடி அளவிற்கு அலுவலகங்களை விற்ற பெங்களூர் 15.6க்கு மட்டும் விற்று பின்னடைவை சந்தித்துள்ளது. இதன் மூலம் 4.20 சதவிகிதம் சரிவை பெங்களூர் சந்தித்துள்ளது.
சென்னை மட்டும்தான் 131 சதவிகிதம் வளர்ச்சியை கண்டுள்ளது. விரைவில் இந்தியாவில் ஆபிஸ் அப்சார்ப்ஷன் எனப்படும்.. அலுவலகங்களை வாடகைக்கு, குத்தகைக்கு எடுப்பதன் அளவில் சென்னை முதலிடம் பிடிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
2023 ஆம் ஆண்டிற்கான முக்கிய இந்திய நகரங்களில் இன்டஸ்ட்ரியல் & லாஜிஸ்டிக்ஸ் குத்தகை விடுவதில் சென்னை சாதனை படைத்துள்ளது. அதாவது தொழிற்சாலைகள், லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள் குத்தகை விடுவதில் சென்னை முன்னேறி உள்ளது.
அதன்படி, 1. மும்பை - 9.3 மில்லியன் சதுர அடி
2. டெல்லி NCR - 7.1 மில்லியன் சதுர அடி
3. சென்னை - 6 மில்லியன் சதுர அடி
4. பெங்களூரு - 4.7 மில்லியன் சதுர அடி
5. ஹைதராபாத் - 4.3 மில்லியன் சதுர அடி
6. கொல்கத்தா - 3.1 மில்லியன் சதுர அடி
7. அகமதாபாத் - 2.3 மில்லியன் சதுர அடி
8. புனே - 1.8 மில்லியன் சதுர அடி
ஹைதராபாத், பெங்களூரை முந்தி சென்னை 3ம் இடம் பிடித்துள்ளது. சென்னைக்கு பல்வேறு தொழிற்சாலைகள் வரும் நிலையில்தான் சென்னை இந்த சாதனையை படைத்துள்ளது.
ஜிசிசி: இது மட்டுமின்றி சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யும் உலகளாவிய திறன் மையங்கள் உருவாக்குவதில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூர், ஹைதராபாத்தை பின்னுக்கு தள்ளி சென்னை இதில் முதலிடம் பிடித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் உள்ள உலகளாவிய திறன் மையங்களால் (GCCs) மொத்தம் 20.8 மில்லியன் சதுர அடி அலுவலக இடம் குத்தகைக்கு விடப்பட்டது. இதில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது.
1. சென்னை - 6 மில்லியன் சதுர அடி
2. ஹைதராபாத் - 4.1 மில்லியன் சதுர அடி
3. பெங்களூரு - 3.8 மில்லியன் சதுர அடி விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications