Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னைவாசிகளுக்கு மெசேஜ்.. கண்ட கண்ட இடத்தில் தொட்டு.. போலீஸையே அதிர செய்த "காமுகன்"..யார்னு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலியல் தொல்லை குறித்து சிறுமி போலீசில் புகார் கொடுத்ததுமே, அடுத்த 8 மணி நேரத்துக்குள் குற்றவாளியை ரவுண்டுகட்டி பிடித்துவிட்டார்கள் நம்முடைய சென்னை போலீசார்... அப்படி என்ன நடந்தது தலைநகரில்?

சென்னையை சேர்ந்த அந்த பெண்ணுக்கு 42 வயதிருக்கும்.. சென்னை டி.பி.சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை தந்திருந்தார். அந்த புகாரில் உள்ளதாவது:

Chennai Incident and Do you know Who is this Bike Taxi Driver, what did he confessed to the Chennai Police

கட்டிப்பிடித்து ஜாமீன்: "என்னுடைய 13 வயது மகள் வீட்டின் அருகே, கடந்த வெள்ளிக்கிழமை இரவு, டியூஷன் முடித்துவிட்டு வீட்டிற்கு தனியாக திரும்பி கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், திடீரென என்னுடைய மகளை வழிமறித்து, தவறான நோக்கத்தில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தும், உடலில் பல இடங்களில் அறுவறுக்கத்தக்க வகையில் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் வலி தாங்க முடியாமல் எனது மகள் வீட்டிற்கு வந்து என்னிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதார். எனவே எனது மகளிடம் தவறான நோக்கத்தில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.

சிசிடிவி கேமரா: இந்த புகாரின்பேரில், போலீசாரும் அதிரடியில் இறங்கினார்கள்.. சம்பவம் நடந்த தெருவிற்கு சென்றார்கள்.. அங்கே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தார்கள்.. அப்போது இளைஞர் ஒருவர் பைக்கில் வருவதும், டியூஷன் சென்றுவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த சிறுமியிடம் அசிங்கமாக நடந்து கொண்டதும் அந்த கேமராவில் பதிவாகியிருந்தது.

ஆனால், நைட் நேரம் என்பதால், அந்த இளைஞரின் பைக் நம்பர் சரியாக தெரியவில்லை. இருந்தாலும், வேறு வேறு பகுதியில் பொருத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட கேமராக்களில், அந்த பைக் நம்பர் பதிவாகியிருக்கிறதா? என்று போலீசார் ஆராய்ந்தனர். இறுதியில் பைக் நம்பரை கண்டுபிடித்துவிட்டனர்.. சம்பந்தப்பட்ட இளைஞரையும் கண்டுபிடித்துவிட்டனர்.

யோகேஸ்வரன்: இளைஞர் பெயர் யோகேஸ்வரன்.. டிபி சத்திரம் பூஜ்ஜி தெருவை சேர்ந்தவர்.. 24 வயதாகிறது.. இதையடுத்து, போலீசார், உடனடியாக இளைஞர் வீட்டுக்கு கிளம்பி சென்றார்கள்.. வீட்டுக்கு வெளியே அந்த பைக் நின்றுகொண்டிருந்தது.. இறுதியில், இளைஞரை அதிரடியாக கைது செய்து விசாரித்தனர். அப்போது, யோகேஸ்வரன் தந்த வாக்குமூலத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.

இந்த யோகேஸ்வரனுக்கு 2 வருடங்களுக்கு முன்பு, கல்யாணம் ஆகிவிட்டதாம்.. "நசரத்பேட்டையில் 100 நாட்கள்" என்ற தொடர் நடத்தும் பிரபல டிவி நிகழ்ச்சியில் வேலைபார்த்து வந்திருக்கிறார். ஆனால் இவரது நடவடிக்கை சரியில்லாததால், அந்த வேலையிலிருந்து தூக்கிவிட்டார்கள்.. அதற்கு பிறகு வேற வேலை எதுவும் கிடைக்கவில்லை. அதனால், பிரபல பைக் டாக்சி நிறுவனத்தில், கடந்த 3 மாதங்களாக டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ஆன்லைன் பதிவு மூலம் பைக் டாக்சியை ஓட்டி வருகிறார்.

பைக் டாக்சி: பெரும்பாலும் நைட் நேரத்தில்தான், பைக் டாக்சியை ஓட்டி வந்துள்ளார். அந்த நேரத்தில், நிறைய இளம்பெண்கள், பணிமுடித்துவிட்டு, பைக் டாக்சியை புக் செய்து, இவருடன் வந்துள்ளார்கள்.. அந்த பெண்கள் பைக்கில் ஏறினாலே, தேவையில்லாத இடங்களில் பிரேக் போடுவாராம்.. பைக்கில் உட்கார்ந்து வரும் பெண்ணை, தன்னுடன் மோதும்படியும் செய்து கொண்டே இருப்பாராம்.

பெண்கள் இதனால் அதிர்ச்சியடைந்தாலும், சிலர் இதை பற்றி பேசாமலேயே அமைதி காத்துள்ளனர்.. சிலர் யோகேஸ்வரனை கண்டித்திருக்கிறார்கள்..

ஸாரி ஸாரி: எதிர்ப்பு காட்டுபவர்களிடம் மட்டும் யோகேஸ்வரன் ஸாரி சொல்வாராம். சில பெண்கள் இதை கண்டுக்கவில்லையென்றால், உடனே அவர்களது நம்பருக்கு, நைட் நேரத்தில் மெசேஜ் அனுப்பி நட்பாகி, இறுதியில் நெருக்கமாகிவிடுவாராம். இதுதான், யோகேஸ்வரனுக்கு, தைரியத்தை தந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களும், போலீசில் புகார் தராமல் இருந்ததால், கூடுதல் தைரியத்தை தந்திருக்கிறது.

எனவே, நள்ளிரவு நேரத்தில் தனியாக சாலையில் செல்லும் இளம்பெண்கள் பின்னாடியே சென்று, வழிமறித்து, கட்டிபிடித்து முத்தம் கொடுத்துவிடுவாராம்.. உடலில் பல இடங்களில் தொட்டு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வாராம்.. கத்தி கூச்சலிட முயன்றால், இதெல்லாம் வெளியே சொன்னால், உங்களுக்கு தான் அசிங்கம் என்று மிரட்டிவிட்டு தப்பிவிடுவாராம்.

நைட் நேர மெசேஜ்: இப்படி இந்த 3 மாதங்களில் மட்டும், மிட்நைட் நேரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்..

இதில் சிறுமிகளையும் விட்டுவைக்கவில்லை.. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சம்பவம்தான் இவருக்கு ஆப்பு வைத்திருக்கிறது.. பாதிக்கப்பட்ட சிறுமி வலி தாங்க முடியாமல், பெற்றோரிடம் சொல்லவும்தான், விஷயம் போலீஸ் வரை சென்றுள்ளது..

3 மாதங்களில் 50-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சேட்டையை நடத்தியது உறுதியானதையடுத்து, யோகேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மகளிர் போலீசாரும் இதுகுறித்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. 22 வயதிலேயே கல்யாணம் முடித்திருக்கும் இந்த யோகேஸ்வரனின் மனைவியை நினைத்தால்தான் பரிதாபமாக உள்ளது..!!

இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, "இரவில் பைக் டாக்சி ஓட்டினால் போனஸ் அதிகமாக கிடைக்கும்... சாலையும் வெறிச்சோடி இருக்கும் என்பதால் இந்த இளைஞர், இரவு நேரத்தில் பைக் டாக்சி ஓட்டி வந்திருக்கிறார்.

எனவே, தனியாக நடந்து செல்லும் பெண்களின் பாதுகாப்புக்காகவே "காவலன்" செயலி உள்ளது. இந்த செயலியை பெண்கள் தங்கள் செல்போனில் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் இதுபோன்ற இளைஞர்களால் பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தால், உடனடியாக காவலன் செயலியை பயன்படுத்தி போலீசை உதவிக்கு அழைக்கலாம்.

பைக் டாக்சியில் முன்பதிவு செய்து செல்லும் பெண்கள் இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தால் உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். முன்பதிவு செய்யும்போது அந்த டிரைவரின் செல்போன் எண், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அனுப்பப்பட்டு இருக்கும் என்பதால் அதுபோன்ற நபர்களை எளிதில் பிடித்து விட முடியும்" என்றார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+