வேற மாதிரி குட் நியூஸ்.. சென்னை சேப்பாக்கம் IPL பார்க்க போறீங்களா? தமிழக அரசு சர்ப்ரைஸ் பாருங்க
சென்னை: ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக சென்னையில் நடந்து வருமநிலையில், தமிழக அரசு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தந்துள்ளது.. என்ன அது?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் தற்போது தொடங்கி நடந்து வருகிறது.. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியின் வீரர்களை தயார் செய்து தீவிரமான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்..

ரசிகர்கள்: இந்த வருட ஐபிஎல் முதல் போட்டியே சென்னையில்தான் துவங்கியது.. ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவும், ஆர்சிபி- சிஎஸ்கே அணிகளும் மோதி ரசிகர்களை முதல்நாளிலேயே பரவசப்படுத்தியிருந்தன.. இப்படிப்பட்ட சூழலில்தான், ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தமிழக அரசு ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பை அன்றைய தினம் வெளியிட்டிருந்தது..
அதாவது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிகளை காண வருபவர்கள், ஆன்லைன் டிக்கெட்டை காட்டி மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் போட்டி நடைபெறும் 3 மணி நேரத்திற்கு முன்பு, போட்டி முடிந்து 3 மணி நேரத்திற்கு பின்பும், சேப்பாக்கத்தில் இருந்து பிற இடங்களுக்குச் செல்லலாம் என்றும் இந்த சலுகை குளிர்சாதன பேருந்துகளுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஐபிஎல்: இந்நிலைலையில், ஐபிஎல் கிரிக்கெட்டை கண்டுகளிக்க திரளும் ரசிகர்களுக்காகவே மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பஸ்கள் இன்றும் இயக்கப்பட உள்ளதாக கழகத்தின் மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
"சென்னையில் 2024-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதற்கு வரும் மக்களின் நலன் கருதி சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்திடம் இருந்து மாநகர போக்குவரத்துக் கழகம் உரிய பயண கட்டணம் பெற்று சில முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது.
கிரிக்கெட்: அதன்படி, பயணிகள் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டு வைத்திருந்தால் அதை நடத்துநரிடம் காண்பித்து மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் போட்டி நடைபெறும் நேரத்துக்கு 3 மணி நேரத்துக்கு முன்பும், போட்டி முடிந்த பின்னர் 3 மணி நேரத்துக்கும் பேருந்துகளில் பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
அதன்படி இன்று (மார்ச் 26) நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கும் மாநகர பேருந்துகளை இயக்க சிறப்பு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பார்வையாளர்கள் மாநகர பேருந்துகளில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டை காண்பித்து இலவசமாகப் பயணிக்கலாம். இதற்காக பல பேருந்துகளைப் பயன்படுத்தியும் மைதானத்துக்கு வந்தடையலாம்.
சிறப்பு ஏற்பாடுகள்: போட்டி முடிந்த பின்பு அடையாறு, மந்தவெளி, கோட்டூர்புரம், திருவான்மியூர், ஈஞ்சம்பாக்கம், கோவளம், பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம், திருப்போரூர் செல்லும் பேருந்துகள் அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல பாரீஸ் கார்னர்,சென்னை கடற்கரை, ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மணலி, எண்ணூர், மீஞ்சூர், மூலக்கடை, காரணோடை செல்லும் பேருந்துகள் சென்னை பல்கலைக்கழக பேருந்து நிறுத்தத்திலிருந்து இயக்கப்படும்.
மந்தவெளி: ராயப்பேட்டை, மந்தவெளி, நந்தனம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம், மேடவாக்கம், கிண்டி, பல்லாவரம், தாம்பரம், எழும்பூர், கோயம்பேடு, பெரம்பூர், அண்ணாநகர் ஆகிய இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகிலிருந்து இயக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications