4 பகுதிகளாக சென்னையைப் பிரித்து.. ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு நிறம்.. உங்க பகுதி எந்த கலர் தெரியுமா?
சென்னை: கொரோனா பாதிப்புகளின் அடிப்படையில் சென்னையில் உள்ள மண்டலங்கள் சிவப்பு, ஆரஞ்சு, இளம் ஆரஞ்சு, பச்சை ஆகிய 4 வண்ணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,267 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் 170 மாவட்டங்களை சிகப்பு மண்டலங்களாக பிரித்து மத்திய அரசு அறிவித்தது. அது போல் தமிழகத்தில் 22 மாவட்டங்களை ஹாட்ஸ்பாட்டாக அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருச்சி, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கும்.

214 பேர்
இந்த நிலையில் சென்னையில் நேற்று வரை மொத்தம் 214 கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்தது. இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த 7 பேர் பலியான நிலையில் 20 பேர் குணமடைந்துள்ளனர்.

சிவப்பு நிறம்
அதுபோல் சென்னையிலும் 4 வண்ணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சிவப்பு, ஆரஞ்சு, இளம் ஆரஞ்சு, பச்சை ஆகிய 4 வண்ணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 64 பேர் பாதித்துள்ள ராயபுரம் சிவப்பு நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரஞ்சு நிறம்
அதன்பிறகு 31 பேர் பாதித்துள்ள திருவிக நகர், 24 பேர் பாதித்த கோடம்பாக்கம், 22 பேர் பாதித்துள்ள அண்ணாநகர், 20 பேர் பாதித்த தண்டையார்பேட்டை, 18 பேர் தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்கள் ஆரஞ்சு நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பச்சை நிறம்
7 பேர் பாதித்துள்ள பெருங்குடி, அடையாறு, 5 பேர் பாதித்துள்ள வளசரவாக்கம், 4 பேர் திருவொற்றியூர், 3 பேர் பாதித்துள்ள மாதவரம், ஆலந்தூர், 2 பேர் பாதித்துள்ள சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகள் இளம் ஆரஞ்சு நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை பாதிப்பு உறுதி செய்யப்படாத மணலி, அம்பத்தூர் ஆகிய மண்டலங்கள் பச்சை நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

ஆலந்தூர்
உயிரிழந்தவர்கள் ராயபுரத்தில் 5 பேரும் திருவிக 1 நபரும் தண்டையார்பேட்டையில் 1 நபரும் உள்ளனர். குணம் அடைந்தவர்கள் ராயபுரத்தில் 1 நபரும், கோடம்பாக்கத்தில் 5 பேரும், அண்ணாநகரில் 7 பேரும் தேனாம்பேட்டையில் 3 நபரும், வளசரவாக்கத்தில் 2 பேரும், அடையாறில் ஒருவரும் ஆலந்தூரில் ஒருவரும் ஆவர்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications