பத்திரிகையாளர்களை ஒருமையில் மிரட்டிய பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர்- முதல்வரிடம் பாடம் கற்பாரா?
சென்னை: பத்திரிகை ஊடகவியலாளர்களை ஒருமையில் பேசி கொச்சைப்படுத்தும் பால்வளத் துறை அமைச்சருக்கு ஊடகத் துறையினரின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் பத்திரிகையாளர்களுக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கற்றுக்கொள்ளுங்கள் எனவும் ஊடகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
தமிழக அமைச்சர்களின் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் ஒவ்வொரு பிரஸ்மீட்டிலும் ஏதோ ஒருவகையில் சர்ச்சைகளுக்கு உரிய வகையில் கருத்து தெரிவிப்பார். அத்துடன் எப்போதும் கடுகடுத்த கோபத்துடனேயே பத்திரிகையாளர்களையும் சந்தித்து வருகிறார்.

அநாகரீக விமர்சனம்
பத்திரிகையாளர் சந்திப்பில் ஒன்று பேசிய அமைச்சர் ஆவடி நாசர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை ரோட்டோர அமைச்சர் என பகிரங்கமாக விமர்சித்தார். அதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை, அவரு யாருங்க? நீங்க சொல்லித்தான் அவரையே எனக்கு தெரியும் என்றார்.

திருவள்ளூர் நிகழ்ச்சி
இதன் தொடர்ச்சியாக தேசிய பத்திரிகையாளர் தினமான இன்றும் செய்தியாளர்களை பாடாய்ப்படுத்தியிருக்கிறார் அமைச்சர் ஆவடி நாசர். இந்த செயல் செய்தியாளர்களை வேதனைக்கு உள்ளாக்கியது. திருவள்ளூரில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் பால்வளத் துறை அமைச்சருமான நாசர் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு பாராட்டி பரிசு அளித்து கவுரவித்தனர்.

பத்திரிகையாளர்களை ஒருமையில் மிரட்டிய அமைச்சர்
இந்த நிகழ்வில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் பேசிய போது அதனை ஒளிப்பதிவு செய்த ஊடக ஒளிப்பதிவாளர் மற்றும் செய்தியாளர்களை ஒருமையில் வழக்கம்போல் தனக்கே உரிய பாணியில் அமைச்சர் ஆவடி நாசர் அநாகரிகமான முறையில் மிரட்டினார். அதுவும் இன்று பத்திரிக்கையாளர் தினம் என்பதையும் மறந்து ஒருமையில் பேசி விரட்டினார். பின்னர் செய்தியாளர் சந்திப்பிலும் கேள்வி கேட்ட பத்திரிகையாளரை ஒருமையில் பேசி அடக்கினார். அமைச்சர் ஆவடி நாசரின் இந்த செயல்பாடுகள் பத்திரிகையாளர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

முதல்வரிடம் புகார் தர முடிவு
தொடர்ந்து இதுபோன்ற செயலைச் செய்து செய்து வரும் அமைச்சர் நாசரின் செயலை அனைத்து ஊடகவியலாளர்களும் கண்டித்தனர். இதை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர். பொதுவாக பத்திரிகையாளர்களை மிக மரியாதையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினும் நடத்துகின்றனர். ஆனால் முற்றிலும் வேறுபட்ட வகையில் ஏனோ தெரியாமல் அமைச்சர் ஆவடி நாசர் அநாகரிகமாக நடந்துவருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினிடம்தான் அமைச்சர் ஆவடி நாசர் போன்றவர்கள் பாடம் கற்க வேண்டும் என்பது பத்திரிகையாளர்களின் கருத்து.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications