சென்னை-கன்னியாகுமரி.. இனி ரோட்டில் பறக்கலாம்! ஆதவ் அர்ஜுனா சொன்ன சூப்பர் திட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை-கன்னியாகுமரி இடையே 8 வழிச்சாலை அமைக்கப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். இது அடுத்த 40 ஆண்டுகளுக்கு பலன் தரும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

நேற்று சட்டப்பேரவையில் பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் ஆதவ் அர்ஜுனா இந்த அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

Chennai-Kanyakumari 8-Lane Highway

இது குறித்து அவர் பேசியதாவது, "சென்னை-கோவை-தூத்துக்குடியை இணைக்கும் தொழில்தட விரைவுச்சாலை உருவாக்கப்படும். அதேபோல சென்னை-கன்னியாகுமரி 8 வழிச்சாலை, சென்னை நுழைவு வழித்தடச் சந்திப்புகளை மேம்படுத்துதல், திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், கிளாம்பாக்கம்-செங்கல்பட்டு உயர்மட்ட சாலை உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மும்பையின் தரத்தில்.. சென்னை-மாமல்லபுரம்-புதுச்சேரியை இணைக்கும் கடல்வழி உயர்மட்ட சாலை தொடர் கட்டம், கட்டமாக உருவாக்கப்படும். இது மும்பை-நவிமும்பை கடல் இணைப்பு சாலையை போன்று இருக்கும். மேலும் முதலமைச்சரின் பாதுகாப்பான சாலைகள் இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ.500 கோடியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி போக்குவரத்து விதிமீறல் கண்டறிதல், சாலை பாதுகப்புப் பணிகள், நெடுஞ்சாலை அவசர சிகிச்சை மையங்கள், சாலை பாதுகாப்பு கண்காணிப்புக்குழு ஆகியவற்றை உள்ளடக்கி செயல்படுத்தப்படும்.

சாலைகளை சீரான முறையில் பராமரிக்க.. சீரான சாலைகள் திட்டம் ரூ.250 கோடியில் செயல்படுத்தப்படும். சென்னை-மாமல்லபுரம்-புதுச்சேரி இடையில் கடல்வழிப் பயணிகள் படகு போக்குவரத்து சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையின் கலங்கரை விளக்கம் தொடங்கி.. அடையாறு திரு.வி.க பாலம் வரை உயர்மட்டச் சாலை அமைக்கப்படும். வட சென்னையில் வியாசர்பாடியில் உள்ள ரயில்வே மேம்பாலம் நீட்டிக்கப்படும்.

இதுபோக பேசின் பிரிட்ஜ் பகுதியில் உள்ள குறுகலான பாலங்கள் அகலப்படுத்தப்படும். சென்னை-திருத்தணி சாலையில் பாடி முதல் திருநின்றவூர் வரை உயர்மட்ட சாலை அமைக்கப்படும். ஊரக சாலைகளை தரம் உயர்த்த.. ஒவ்வொரு ஆண்டும் 2000 கி.மீ சாலைகளை மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். ஊரக சாலைகளை தரம் உயர்த்த ஆண்டுதோறும் 2,000 கி.மீ சாலைகளை மேம்படுத்த ரூ.2,550 கோடியில் ஊரகப்பகுதி சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+