வஞ்சிரம் மீன், வவ்வால் மீன், இறால்.. மீன் பிரியர்களால் முட்டிமோதிய காசிமேடு.. சென்னை மீனவர்கள் குஷி
சென்னை: புரட்டாசி மாதம் முடிந்ததையடுத்து, மீன் பிரியர்கள் காசிமேட்டில் இன்று குவிந்தனர்.. இதனால், மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதமான புரட்டாசியில் ஆடு, மாடு, கோழி, கடல் உணவுகளின் விலை கடுமையாக சரிவடைவது வழக்கம்.. காரணம் புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் அசைவ உணவை உண்ண மாட்டார்கள்..

அந்தவகையில், இந்த வருடமும் புரட்டாசி மாதம் தொடங்கியிருக்கிறது.. இதனால், ஆடு, மாடு, கோழி, முட்டை, மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது.
புரட்டாசி மாதம்: இறைச்சியை குறைவான அளவிலேயே வாங்கி வியாபாரிகள் விற்பனை செய்யும் சூழலும் ஏற்பட்டது.. அதிலும், கடல் கொந்தளிப்பு, மீன் வரத்து குறைவு போன்ற காரணங்களினால், பாம்பன் மீனவர்கள் 12 நாட்களுக்கு கடலுக்கு செல்லாமல், கடந்த 8ம்தேதிதான், விசைப்படகுகளில் மீன் பிடிக்க போனார்கள்..
12 நாட்களுக்கு பிறகும், மீனுக்கு 10 முதல் 20 சதவீதம் வரை விலை குறைந்தது. இப்போது புரட்டாசி மாதம் முடிந்துவிட்டது.. புரட்டாசி முடிந்து இது முதல் ஞாயிற்றுக்கிழமையான என்பதால், காசிமேடு மீன் மார்க்கெட்டில், மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது...
அதிக கூட்டம்: கிட்டத்தட்ட ஒரு மாத காலமாகவே, இறைச்சி சாப்பிடாதநிலையில், இன்று மீன் விற்பனை களைகட்டியது. ஒரு மாதம் கழித்து, மீன்பிரியர்கள் ஏராளமாக குவிந்ததால், மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.
மீன்களிலும் இன்று பெரிய மற்றும் சிறிய ரக மீன்கள் வரத்து அதிகமாகவே காணப்பட்டது. வஞ்சிரம், வவ்வால், பாறை, சங்கரா, இறால், பால் சுறா உள்ளிட்ட மீன்கள் அதிகமாக விற்பனைக்கு வந்திருந்தன. ஆனால், விலையில் பெரிய மாற்றமில்லை.. காரணம், தற்போது நவராத்திரி விழா என்பதால், பலரும் அசைவத்தை தவிர்த்து வருகிறார்கள்.
நவராத்திரி: ஒருவேளை, நவராத்திரி முடிந்தபிறகு, மீன்விலை உயரலாம் என்கிறார்கள். இன்று காசிமேட்டில், வஞ்சிரம் மீன் கிலோ ரூ.700, வவ்வால் - ரூ.450, கடம்பா - ரூ.450, இறால் - ரூ.400, சங்கரா பெரியது - ரூ.400, நண்டு - ரூ.500-க்கு விற்பனை ஆனது. மீன்களை போலவே, சிக்கன், மட்டன் கடைகளிலும் இன்று கூட்டம் அலைமோதியது.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications