சென்னை காசிமேட்டில் வலையில் சிக்கிய பொக்கிஷம்.. எடை மட்டும் 300 கிலோ.. மீனவர்கள் இன்ப அதிர்ச்சி
சென்னை: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு 6 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது சுமார் 300 கிலோ எடையுள்ள ஏமன் கோலா என்ற ராட்சத மீன் கிடைத்தது. இந்த மீனுக்கு மிகவும் கிராக்கி உள்ளது. இதற்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களின் காணப்படும் ராட்சத மீன் வகையைச் சேர்ந்த ஏமன் கோலா மீன் ஆழ்கடலில் மட்டுமே வாழ்கிறது. கேரளாவில் இந்த மீனுக்கு நல்ல கிராக்கி உள்ளது. இதேபோல் ஏமன் கோலா மீனை இலங்கை நாட்டு மக்கள் பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏமன் கோலா மீன் பொதுவாக 15 அடி வரை இருக்கும், இதன் எடை 100 கிலோ முதல் 750 கிலோ வரை கூட இருக்கும். ஆழ்கடலில் மீன்பிடிக்கும்போது இந்த மீன் எப்போதாவது தான் பிடிபடும், கிரேன் மூலம் மட்டுமே படகில் இருந்து கரைக்கு கொண்டு வர முடியும். இந்த ஏமன் கோலா மீனை பலர் போட்டி போட்டு வாங்குவார்கள்.. சென்னை காசிமேடு துறைமுகத்தில் எப்போதாவது ஒருமுறை தான் இது கிடைக்கும்.

சென்னை காசிமேடு பகுதியில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் தினசரி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு 6 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
அவர்கள் ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது சுமார் 15-க்கும் மேற்பட்ட பெரிய ஏமங்கோலா மீன்கள் வலையில் கிடைத்தது. பின்னர் நேற்று காசிமேடு கடற்கரைக்கு திரும்பினர். வலையில் சிக்கிய ஒரு ஏமங்கோலா மீன் சுமார் 300 கிலோ எடை கொண்டது. கிரேன் மூலம் அதை கரைக்கு கொண்டு வந்தனர்.
இது மருத்துவ குணம் கொண்டது என்றதும் இந்த மீன்களை ஏற்றுமதி செய்வதற்காக மொத்த விற்பனையாளர்கள் ஏலத்தில் வாங்கி சென்றதாகவும், ஏமங்கோலா மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். குறிப்பிட்ட ராட்ச மீனை ஏலம் மூலம் விற்பனை செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications