Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காசிமேட்டில் ஒரே பரபரப்பு.. ஏற்கனவே திமுக, அதிமுகவுக்கு செக்.. இப்ப சென்னை கலெக்டர் வரை போயிட்டாங்களே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை காசிமேட்டில் ஏற்கனவே ஒரு பரபரப்பு ஓடிக்கொண்டிருக்கும்நிலையில், புதிதாக மற்றொரு பிரச்சனை முளைத்துள்ளது.. என்னவாம்?
தங்களது உரிமைகளை தாங்களே மீட்டெடுத்து கொள்வதற்காகவும், தங்களுக்கான நலன்களை தாங்களே பெற்றுக் கொள்ள வேண்டும் என்று, பல்வேறு தரப்பினர், தேர்தல்களில் தனித்து போட்டியிடுவது வழக்கம்..

Chennai Kasimedu Fishermen Union and What are the Fishermen Unions Major Demand to the District Collector

டெல்லி விவசாயிகள்: இப்படித்தான், நாட்டையே உலுக்கும் அளவுக்கு அன்று டெல்லி விவசாயிகள் போராட்டம் நடந்தது.. அப்போது விவசாயிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, புதுகட்சியை ஆரம்பித்து, தேர்தலில் போட்டியிடவும் செய்தார்கள்.

அவ்வளவு ஏன்? பாஜக ஆதரவாளரும், நடிகருமான எஸ்வி சேகர்கூட ஒரு பேட்டி தந்திருந்தார். அதில், "பிராமணர்களுக்காக தமிழகத்தில் விரைவில் புதிய கட்சி தொடங்கப்படும், பெயர், கொடி கிடைத்தவுடன் புதிய கட்சி ஆரம்பிக்கப்படும்.. பிராமணர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைப்பதற்காகவே இந்த கட்சி தொடங்கப்படுகிறது. சட்டசபையில் ஒரு பிராமணர் கூட எம்எல்ஏவாக இல்லை" என்று தன்னுடைய விருப்பத்தை கூறியிருந்தார் எஸ்வி சேகர்.

மீனவர்கள்: அந்தவகையில், மீனவர்களும் தனிக்கட்சி ஆரம்பிக்க போவதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது.. அனைத்து மீனவர்கள் சங்க தலைவர் நாஞ்சில் ரவி செய்தியாளர்களிடம் பேசும்போது, "மீனவர்கள் நலன்களை காக்கும் வகையில், புதிய அரசியல் கட்சி துவங்க போகிறோம்.. மீனவர்கள் கட்சி துவங்குவதற்கு காரணமான அதிமுக, திமுக கட்சிகளுக்கு நன்றி.. 610 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகளை ஒருங்கிணைந்து, ஒற்றை தலைமையில் இந்த கட்சி உருவாக்கப்படும்.

மீனவர்கள்: தமிழகம் முழுவதும் மீனவர்களுக்கு 12 சதவீதம் ஓட்டு வங்கி உள்ளதால், சட்டசபை தேர்தலில் போட்டியிட போகிறோம்.. அதற்குள் தேர்தல் கமிஷனில் கட்சி பதிவு செய்யப்படும்.. சென்னையில் பொதுக்கூட்டம் நடத்தி கட்சி பெயர், சின்னத்தை அறிவிக்க உள்ளோம்.. 50 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். 100 தொகுதிகளில், வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக உருவெடுப்போம்" என்றெல்லாம் அறிவித்திருப்பதால், இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

இந்நிலையில், மீனவர் சங்கம் நாஞ்சில் சேவியர் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.. காசிமேடு மீன் சந்தைக்கு வியாபாரம் செய்ய வரும் மீன் வியாபாரிகள் கொண்டு வரும் பணத்தை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துவிடுகிறார்களாம். உடனே சென்னை மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அளித்துள்ளார்..

அடுத்த கோரிக்கை: அகில இந்திய மீனவர் சங்கம் சார்பில், அதன் தேசிய அமைப்பு செயலாளர் நாஞ்சில் ஜி.ஆர்.சேவியர் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
"காசிமேடு மொத்த மீன் சந்தைக்கு வெளியூர்மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து மீன் கொள்முதல் செய்வதற்காக ஆயிரக்கணக்கான மீன் வியாபாரிகள் தினமும் வந்து செல்கின்றனர். சில்லறை, மொத்த வியாபாரிகள் என பலதரப்பட்ட வியாபாரிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் தினசரி வர்த்தகத்துக்காக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ரொக்கப் பணம் கொண்டு வருவது நடைமுறையில் உள்ளது.

தேர்தல் விதிகள்: தற்போது தேர்தல் காலம் என்பதால், தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தினமும் சோதனை அடிப்படையில் மீன் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்துக்காக காசிமேடு மொத்த சந்தைக்கு பணம்கொண்டு செல்வதற்கு அனுமதி மறுக்கின்றனர்.

இதனால், காசிமேடு மொத்த சந்தையில் மீன் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மீன் வியாபாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர். மீன் வியாபாரத்தை பொருத்தவரை சரியான நேரத்தில் சந்தைக்குச் சென்றால்தான் நல்ல தரமான மீன்களை வாங்க முடியும்.

மீனவர்கள்: எனவே, மீனவ மக்களுக்கும், வியாபாரிகளுக்கும், மீன்பிடி தொழிலாளர்களுக்கும் எவ்வித வாழ்வாதார இடையூறும் இல்லாமல் தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு சிறப்பாக மீன்பிடித்தொழில் செய்திட வழி ஏற்படுத்தி தர வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

சரியான நேரத்தில் சந்தைக்குச் சென்றால்தான் நல்ல தரமான மீன்களை வாங்க முடியும் என்பதுதான் மீன்வியாபாரிகளின் தலையாய பிரச்சனை.. அதனால் மீன் வியாபாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பதால், காவல்துறை இதற்கு உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று நம்பப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+