கிளாம்பாக்கம் டூ சென்னை.. கோயம்பேடு, தாம்பரம், கிண்டி, எந்த ரூட்டில் எந்த பஸ்.. சிஎம்டிஏ விளக்கம்
சென்னை: சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு, கிண்டி, தாம்பரம், திருவான்மியூர், பிராட்வே, வடபழனி, பூந்தமல்லி, ஐயப்பன்தாங்கல் என சென்னைக்குள் செல்லும் பேருந்துகள் முழு விவரங்களை சிஎம்டிஏ வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலை இப்போது பார்ப்போம்.
சென்னையின் புதிய பேருந்து முனையமான கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) திறந்து வைக்கிறார். இன்று முதல் பயன்பாட்டிற்கு பேருந்து நிலையம் வருகிறது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்துது நிலையம் அமைக்கும் பணி நடந்து வந்தது. 88.52 ஏக்கர் பரப்பளவில் ரூ.397 கோடி மதிப்பில் 2018-ம் ஆண்டு இந்த பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது பேருந்து நிலையத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களை எந்தவொரு சிக்கலும் இல்லாமல் இயக்கும் வகையில் உள்ளது.
ஒரே நேரத்தில், 130 அரசு பஸ்கள், 85 தனியார் ஆம்னி பஸ்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பயணிகள் செல்ல வசதியாக 3 ஆயிரத்து 500 மாநகர பேருந்துகள் செல்ல மேற்கூரையுடன் கூடிய நடைமேடை அமைக்கப்பட்டிருக்கிறது.
6 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில் தரைத் தளம், முதல் தளத்துடன் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அடித்தளத்தில் 260 கார்கள், 568 இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும் 2-வது அடித்தளத்தில் 84 கார்கள், 2 ஆயிரத்து 230 இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.
இந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு இன்று முதல் வரும் நிலையில், ஒரு நாளைக்கு ஒரு லட்சம் மக்கள் பயணிக்க முடியும். இந்த பேருந்து நிலையம் குறித்து சிஎம்டிஏ வெளியிட்ட அறிவிப்பில். "SETC, TNSTC, PRTC, மற்றும் தனியார் பேருந்துகள் (ஆம்னி) ஆகியவற்றின் தெற்கு நோக்கி செல்லும் பேருந்துகளுக்காக, கோயம்பேட்டில் உள்ள சென்னைப் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்தில் உள்ள புதிய கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு பேருந்துச் செயல்பாடுகள் மாற்றப்பட உள்ளது.
SETC மற்றும் தனியாருக்குச் சொந்தமான ஆம்னிபஸ்களின் செயல்பாடுகள் உடனடி நடைமுறையுடன் தொடங்கும், அதே நேரத்தில் TNSTC மற்றும் PRTC ஆகியவை பற்றி பின்னர் தெரிவிக்கப்படும். " என்று கூறியுள்ளது.
சென்னையில் உள்ள பல்வேறு நிறுத்தங்களில் இருந்து கிளாம்பாக்கம் முனையத்திற்கும், அதற்கு நேர்மாறாக பெரும் போக்குவரத்து நேரத்தின் போது பயணிகளின் பயணத்தை எளிதாக்க பின்வரும் பயண அட்டவணையின்படி எம்டிசிஇல் சீரான இடைவெளியில் பேருந்து சேவைகள் இயக்கப்பட உள்ளது.
காலை 4 முதல் 10 மணி வர கோயம்பேடுக்கு 5 நிமிட இடைவெளியில் பேருந்துகள் செல்லும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 15 நிமிட இடைவெளியில் பேருந்துகள் செல்லும். மாலை 4 மணி முதல் இரவு 10மணி வரை 5 நிமிட இடைவெளியில் பேருந்துகள் செல்லும். இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை 15 நிமிட இடைவெளியில் பேருந்துகள் செல்லும். கோயம்பேடு கிளாம்பாக்கம் வழித்தட பேருந்து எண்கள் 700v,70c,104cct.
தாம்பரம்: காலை 4 முதல் 10 மணி வர தாம்பரத்திற்கு 3 நிமிட இடைவெளியில் பேருந்துகள் செல்லும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 5 நிமிட இடைவெளியில் பேருந்துகள் செல்லும். மாலை 4 மணி முதல் இரவு 10மணி வரை 2 நிமிட இடைவெளியில் பேருந்துகள் செல்லும். இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை 8 நிமிட இடைவெளியில் பேருந்துகள் செல்லும். தாம்பரம் கிளாம்பாக்கம் வழித்தட பேருந்து எண்கள் 55v, m18.
கிண்டி: காலை 4 முதல் 10 மணி வர கிண்டிக்கு 3 நிமிட இடைவெளியில் பேருந்துகள் செல்லும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 10 நிமிட இடைவெளியில் பேருந்துகள் செல்லும். மாலை 4 மணி முதல் இரவு 10மணி வரை 3 நிமிட இடைவெளியில் பேருந்துகள் செல்லும். இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை 15 நிமிட இடைவெளியில் பேருந்துகள் செல்லும். கிண்டி கிளாம்பாக்கம் வழித்தட பேருந்து எண் 18act.
பிராட்வே: பிராட்வேக்கு (பாரிஸ் கார்னர்) 10 நிமிட இடைவெளியில் பேருந்துகள் செல்லும். பிராட்வே கிளாம்பாக்கம் வழித்தட பேருந்து எண்கள் 18a (சைதாப்பேட்டை நந்தனம் வழித்தடம்), 21g (மந்தைவெளி, மயிலாப்பூர் வழித்தடம்).
திருவான்மியூர் செல்ல 8 நிமிட இடைவெளியில் பேருந்துகள் செல்லும். திருவான்மியூர் கிளாம்பாக்கம் வழித்தட பேருந்து எண்கள் 91, 955, 91k, 95k.
SETC, TNSTC, PRTC, மற்றும் தனியார் பேருந்துகள் (ஆம்னி) ஆகியவற்றின் தெற்கு நோக்கி செல்லும் பேருந்துகளுக்காக, கோயம்பேட்டில் உள்ள சென்னைப் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்தில் உள்ள புதிய கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு பேருந்துச் செயல்பாடுகள் மாற்றப்பட… pic.twitter.com/dDSu0V503Y
— CMDA Chennai (@CMDA_Official) December 30, 2023
திநகர் செல்ல செல்ல 10 நிமிட இடைவெளியில் பேருந்துகள் செல்லும். திநகர் கிளாம்பாக்கம் வழித்தட பேருந்து எண்கள் 51 a. 51 ax, v51x.
பூந்தமல்லிக்கு 10 நிமிட இடைவெளியில் பேருந்துகள் செல்லும். பூந்தமல்லி கிளாம்பாக்கம் வழித்தட எண்: 66p
ஐயப்பன்தாங்கல் 8 நிமிட இடைவெளியில் பேருந்துகள் செல்லும்.
ஐயப்பன்தாங்கல் கிளாம்பாக்கம் வழித்தட எண்: 166x
இதுதவிர வேளச்சேரி (51x, 91r), அடையாறு (99, 99x) சோழிங்கநல்லூர் (95xct), திருவிநகர் (104t) என பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சிம்பிபளாக சொல்வது என்றால், தாம்பரம் சென்ற பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் வரை செல்ல போகிறது.












Click it and Unblock the Notifications