பிரபல ஓட்டலில் விழுந்தடித்து ஓடிய 3 பெண்கள்.. பப்பில் ஆட்டம் போட்ட 18 பேரையும் வளைத்த சென்னை போலீஸ்
சென்னை: இளம் தலைமுறையினரிடம் போதை கலாச்சாரம் பெருகி வருகிறது.. பண்ணை வீடுகள், நட்சத்திர ஹோட்டல்களில், நைட் பார்ட்டி, இசை விருந்து போன்ற பெயர்களில் நடைபெறும் நிகழ்வுகளில், ஏராளமான இளம் பெண்களும், இளைஞர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலும் பள்ளி கல்லூரி மாணவிகளாகவும், ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களாகவும் இருப்பது வேதனையை ஏற்படுத்துகிறது. இதோ சென்னையில் ஒரு பிரபல ஓட்டலில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, டாஸ்மாக் கடைகளும், மனமகிழ் மன்றம், கிளப்கள் போன்ற பெயர்களில் தனியார் மதுபான பார்களும் செயல்பட்டு வருகின்றன..

டாஸ்மாக் கடைகள், பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்குகிறது.. ஆனால், மனமகிழ் மன்றங்களில் காலை 11 முதல் இரவு 11 மணி வரை மதுபானங்கள் விற்கப்படுகின்றன. சில பார்களில் 24 மணி நேரமும் மதுவிற்பதாக புகார்களும் உள்ளன.
மதுபோதையில் பெண்கள்
டாஸ்மாக் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க நீதிமன்றங்கள் அறிவுறுத்தி வருகின்றன.. மற்றொருபுறம் போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிக்க தமிழக போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
எனினும், போதையால் சிக்கி சீரழிவோர்களின் எண்ணிக்கை பெருகியபடியே உள்ளது.. அதிலும், பெண்கள் மது அருந்தும் போக்கு அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறிவருவது அதற்கு மேல் கவலையை மக்களுக்கு உண்டுபண்ணி வருகிறது.
பிரபல ஓட்டலில் பெண்கள்
நேற்று சென்னையில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. கீழ்ப்பாக்கம் ஈவிஆர் சாலையில் பப் ஒன்று செயல்பட்டு வருகிறது.. இங்கு கஞ்சா பார்ட்டி நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு விரைந்தனர்.. அங்கிருந்த ரூம்களில் சோதனையிட்டனர்... ஆனால், அந்த ரூம்களில் யாருமே இல்லை...
பப்புக்கு வந்த மொத்த பேரும், அருகில் உள்ள பிரபல ஹோட்டலில் தங்கி இருப்பது தெரியவந்தது... உடனே போலீசார் அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தனர்.. அங்கு தங்கியிருந்த 3 பெண்கள் உள்பட மொத்தம் 18 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்..
கஞ்சா போதை கும்பல்
அவர்களில் விசாரணை நடத்தப்பட்டதில், இவர்கள் அனைவருமே பப்பில் நடந்த பார்ட்டியில் பங்கேற்றதும், மெத்தபெட்டமைன் போதைப்பொருள், கஞ்சா பயன்படுத்தியதும் உறுதியானது.. இதையடுத்து 18 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களது 3 கார்கள், 2 பைக்குகள், 18 செல்போன்கள், மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை கண்டித்த நீதிமன்றம், இறுதியில் 18 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
தெலுங்கானா பண்ணை வீடு விருந்து
நேற்றைய தினம் தெலுங்கானாவிலும் இப்படியொரு நிகழ்வு நடந்தது.. ஹைதராபாத்தின் மொய்னாபாத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், போதை விருந்து நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்கவும், உடனடியாக கிளம்பி சென்றனர், அந்த பண்ணை வீட்டில் 65 பேர் போதையில் நடனமாடி கொண்டிருந்தனர். அதில் 22 சிறுமிகளும் போதையில் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
பிறகு 65 பேரையுமே மெடிக்கல் டெஸ்ட்டுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.. இதுதொடர்பான நடத்தப்பட்ட விசாரணையில், விருந்து நிகழ்ச்சியில் 2 பேர் கஞ்சா பயன்படுத்தியதும், மற்றவர்கள் மது அருந்தியதும் உறுதியானது.
இந்த போதை விருந்தை சமூகவலைத்தளம் மூலம் ஆட்களை திரட்டி ஏற்பாடு செய்த கனடாவை சேர்ந்த இஷான் என்பவர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து அவர்களை விசாரித்து வரும் நிலையில், சென்னையிலும் 18 பேர் கைதானது பரபரப்பை தந்து வருகிறது.
-
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக எம்எல்ஏ வென்ற விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் புதிய வழக்கு -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட்












Click it and Unblock the Notifications