Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் பணம் இழந்து படுக்க இடமில்லாமல் தவிப்பு.. உதவியவருக்கு காலையில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த நூரில் அமீன் என்பவர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்தார். இவர், வெளிநாட்டு விசாவை புதுப்பிப்பதற்காக கடந்த ஏப்ரல் 3-ந் தேதி சென்னை வந்துள்ளார். இவர் சென்னையில் கே.கே.நகர் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளார். அங்கு வந்த கர்நாடகா இளைஞர் ஒருவர் தனது உடைமைகள் தொலைந்ததாக கலங்கி உள்ளார். அவருக்கு பரிதாபப்பட்டு படுக்க இடம் கொடுத்துள்ளார். அந்த வாலிபர் செய்த செயல், அவரை மட்டுமல்ல, உதவி செய்வோரையும் ஆடிப்போக வைத்துள்ளது.

இன்றைக்கு 'உதவி செய்பவர்களுக்கு உபத்திரவம்' தான் வரும் என்பதாக நிலைமை உள்ளது. யார் ஒருவர் உதவி செய்கிறார்களோ, அவர்களை பலிகடா ஆக்கி, முன்னேறும் உலகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். மனித நேயத்துடன் உதவி செய்பவர்களிடம் திருடும் அளவிற்கு மனித நேயம் குறைந்து வருகிறது. மனசாட்சியே இல்லாமல் இன்றைக்கு விலங்குகளை போல் மனிதர்கள் பல பகுதிகளில் நடந்து கொள்கிறார்கள்.

Chennai kk Nagar A twist beyond cinema for the man who helped a homeless young man in Chennai

சினிமாவை மிஞ்சும் சம்பவம்

நாய்கள், பூனைகள் உள்பட பல்வேறு விலங்குகள் தனக்கு உதவி செய்வர்களை மறப்பது இல்லை.. ஆனால் மனிதர்கள் உதவி செய்தால், அதனால் சிக்கலைத்தான் பல நேரங்களில் சந்திக்கிறார்கள். இரவில் பணம், உடமைகளை இழந்த ஒருவருக்கு உதவி செய்தவர், சினிமா படத்தில் வருவது போல் மொத்தமாக பறிகொடுத்துள்ளார். சென்னை கே.கே.நகரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

திருவாரூர் அமீன்

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 39 வயதாகும் நூரில் அமீன் சவுதி அரேபியாவில் பணியாறி வருகிறார். இவர், வெளிநாட்டு விசாவை புதுப்பிப்பதற்காக கடந்த ஏப்ரல் 3-ந் தேதி சென்னை வந்துள்ளார். சென்னையில் கே.கே.நகர் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருக்கிறார் நூரில் அமீன். இரவு உணவு சாப்பிட்டு விட்டு, தங்கும் விடுதிக்கு நடந்து சென்றுள்ளார்.

உதவி கேட்ட இளைஞர்

நூரில் அமீன் செல்லும் வழியில் அடையாளம் தெரியாத இளைஞர், நூரில் அமீனிடம் தன் பெயர் நஞ்சுண்ட கவுடா என்று கூறி அறிமுகமாகியிருக்கிறார். தனது உடைமைகள் அனைத்தும் தொலைந்து விட்டதாகவும், பணத்தை இழந்துவிட்டதாகவும், தங்குவதற்கு இடம் வேண்டும் எனவும் பரிதாபமாக உதவி கேட்டார். இதை கேட்டு இரக்கப்பட்ட நூரில் அமீன், நஞ்சுண்ட கவுடாவை, அவரது அறையில் தங்குவதற்கு அனுமதித்து இடம் கொடுத்தார்.

இதற்கிடையே நூரில் அமீன் அறையில் படுத்து தூங்கிவிட்டார். அவரோடு, நஞ்சுண்ட கவுடாவும் படுத்து தூங்கினார். நள்ளிரவில் கண் விழித்து எழுந்து பார்த்தபோது, நூரில் அமீன் அந்த அதிர்ச்சியை கண்டார். தன்னோடு நஞ்சுண்ட கவுடா என்ற பெயரில் தூங்கிய நபரை காணவில்லை. அந்த நபர், நூரில் அமீன் வைத்திருந்த ரூ.500 ரொக்க பணம் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் இந்திய மதிப்பிலான சவுதி அரேபிய ரியால் பணம், 2 செல்போன்களை திருடிக்கொண்டு தப்பி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

போலீசில் புகார்

இரவில் பணம் இல்லாமல், உடமைகளை இழ்ந்து தவித்தவருக்கு உதவி செய்தவரிடமே பொருட்களை அந்த நபர் அபகரித்து சென்றுவிட்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த நூரில் அமீன், கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில், தங்க இடம் கேட்டு, உதவி செய்தவரின் உடைமைகளை திருடி தப்பிய நபர் கர்நாடகா மாநிலம் தும்கர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயதாகும் நஞ்சுண்ட கவுடா என்பது தெரியவந்தது.

சிறையில் அடைப்பு

தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம் அவர் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டார். அவரை சென்னை அழைத்து வந்த போலீசார் விசாரணைக்கு பிறகு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். திருடிய பணத்தை அவர் செலவு செய்துவிட்டார். செல்போன்களையும் விற்றுவிட்டது விசாரணையில் தெரியவந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+