சென்னை ஈசிஆர் அரசு பள்ளி ஹாஸ்டலில் சில்மிஷம்? கோவளம் கேவலத்தில் இறங்கிய சமையலர்! பாவம் குழந்தைகள்
சென்னை: சமூகத்தில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால், கல்வி நிறுவனங்களிலும், விடுதிகளிலும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகுந்த வேதனையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சம்பவங்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளன.. இதோ இந்த கோவளம் கொடுமையை பாருங்கள்
செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.. இந்த விடுதியில்தான் பாலியல் கொடுமை நடந்துள்ளதாம்..

அரசு பள்ளி ஹாஸ்டல்
இந்த பள்ளியில் முதியோர் காப்பகம், குழந்தைகள் காப்பகம் மற்றும் மாணவியர் விடுதி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. அங்கு ஹாஸ்டலில் தங்கி உள்ள 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தரப்பட்டுள்ளது..
இந்த ஹாஸ்டலில் தங்கி அதே பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார் ஒரு சிறுமி.. இவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.. தந்தையைப் பிரிந்து வாழும் தனது தாயாருடன் வசித்து வருகிறார். தன்னுடைய மகள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஹாஸ்டலில் மகளை சேர்த்துள்ளார்.. மாதம் ஒருமுறை வந்து பார்த்து விட்டு செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
ஈசிஆர் சென்னை
அப்படித்தான், கடந்த 24ம் தேதி மகளை பார்க்க ஹாஸ்டலுக்கு வந்துள்ளார் அந்த தாய்.. அப்போது தனது அம்மாவிடம் அழுதுகொண்டே தனக்கு நேர்ந்த பாலியல் சித்ரவதையை சொல்லி அழுதுள்ளார் சிறும்..
அந்த ஹாஸ்டலில் சமையல் வேலை செய்பவர், தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாகவும், தன்னிடம் மட்டுமன்றி, ஹாஸ்டலில் தங்கி படிக்கும் 20-க்கும் மேற்பட்ட சக மாணவிகளிடமும் தவறாக நடக்க முயற்சிப்பதாகவும், பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாகவும் சிறுமி கூறியுள்ளார்..
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அம்மா, உடனடியாக இது குறித்துப் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். பள்ளி நிர்வாகம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சமையலர் மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டது உறுதி செய்யப்பட்டது.
சென்னை கோவளம் சமையலர்
இதனைத் தொடர்ந்து, மாணவிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாணவியின் தாயார் நேற்று காலை கேளம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் கோமதி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது விழுப்புரம் மாவட்டம் காடுவெட்டி பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (44) என்பது உறுதியானது.
இதையடுத்து, போலீசார் லட்சுமணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் தள்ளினார்கள்..
பெற்றோரை விட்டுத் தள்ளி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பில் இருந்த ஊழியரே இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்டது, பெற்றோர் மத்தியில் பெரும் அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு மீதும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன...












Click it and Unblock the Notifications