கோயம்பேட்டில் பெரிய மாற்றம்.. சென்னை உட்பட எல்லா பக்கமும் எகிறிய பூக்கள் விலை! நாளைக்கு கோகுலாஷ்டமி
சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில், இன்று முதல் தர தக்காளி 50 ரூபாய்க்கும், இரண்டாம் தர தக்காளி 40 ரூபாய்க்கும், மூன்றாம் தர தக்காளி 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் நவீன தக்காளி ஒரு கிலோ 15 ரூபாய் குறைந்து 50க்கு விற்கப்படுகிறது.வெங்காயத்தை பொறுத்தவரை 2 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. முட்டைக்கோஸ் கிலோ 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், நாளை கோகுலாஷ்டிமியை முன்னிட்டு, பூக்கள் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன.
பொதுவாக விஷேச நாட்களில் பூக்களின் விலை அதிகரிப்பதும், விஷேச அல்லாத நாட்களில் விலை குறைவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.. அதேபோல பூக்களின் விலை, சந்தை நிலவரம், பூக்களின் வரத்து ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடவும் செய்கின்றன.

ஆடி மாதம் - கடைசி வெள்ளி
அந்தவகையில், தற்போதும் விசேஷ நாட்கள் வந்துள்ளன.. ஆடி மாதம் என்றாலே, அம்மாதம் முழுவதும் அம்மனுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது. அதிலும் இன்று ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியாகும்..
நாளைய தினம் ஆகஸ்ட் 16ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி ஆகும். எனவே இந்த நாட்களில் வீடுகள் மற்றும் கோயில்களில் அதிக பூ தேவை எழுந்துள்ளது.. இதனால் ஆடி கடைசி வெள்ளி மற்றும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
2 நாளைக்கு முன்பு, ரூ.80 முதல் ரூ.100 வரை விற்ற அரளி பூ, நேற்று ரூ.350 க்கும், மல்லிகை, முல்லை பூக்கள் ரூ.400 முதல் ரூ.500 வரையும் பரவலாக விற்பனை செய்யப்பட்டது.. ஆனால் இன்று மீண்டும் இரட்டிப்பாகி விட்டது.
கோயம்பேடு பூ மார்க்கெட்
சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டிலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.. 2 நாளைக்கு முன்புதான், கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. ஆனால், நாளை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று முதலே அனைத்து பூக்களின் விலையும் எகிற துவங்கிவிட்டன..
இன்று ஒரு கிலோ மல்லி ரூ.500லிருந்து, ரூ.900க்கும், ஐஸ் மல்லி ரூ.400லிருந்து ரூ.800க்கும், முல்லை ரூ.300லிருந்து ரூ.750க்கும், ஜாதிமல்லி ரூ.200லிருந்து ரூ.750க்கும், கனகாம்பரம் ரூ.500லிருந்து ரூ.800க்கும், சாமந்தி ரூ.120லிருந்து ரூ.200க்கும், சம்பங்கி ரூ.100லிருந்து ரூ.150க்கும், அரளி பூ ரூ.100லிருந்து ரூ.300க்கும், பன்னீர் ரோஸ் ரூ.80லிருந்து ரூ.140க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.100லிருந்து ரூ.180க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
3 நாளைக்கு விலை குறையாது
சென்னை மட்டுமல்லாமல், தமிழகத்தின் அனைத்து பூ மார்க்கெட்டுகளிலும் மல்லி, ரோஜா, செவ்வந்தி பூக்களின் விலையும் வழக்கத்தைவிட உயர்ந்து காணப்படுகின்றன. அதாவது, இந்த விசேஷ தினங்களுக்காக 3 மடங்கு அதிகரித்துள்ளதாம் பூக்களின் விலை.. எனினும் கடவுளுக்கு பூக்கள் தேவையாக இருப்பதால், பலரும் பேரம் பேசாமல் பூச்களை வாங்கி செல்கிறார்கள்..
கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் இதுகுறித்து சொல்லும்போது, இன்னும் 3 நாட்களுக்கு பூக்களின் இதே விலையில்தான் நீடிக்கும்.. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஆடி மாதம் 5ம் வாரம் என்பதால் அம்மன் கோயில்களில் விசேஷமாக இருக்கும் என்பதால் அன்றைய தினமும் பூக்களின் விலை உயரும் என்று தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு பொதுமக்கள் கதிகலங்கி போயிருக்கிறார்கள்.. எனினும் தேவை இருப்பதால், பூக்கள் விற்பனை அதிகரிக்கும் என்றே நம்பப்படுகிறது.
வண்ண வண்ண கிருஷ்ணர் சிலைகள்
இதனிடையே, கிருஷ்ணர் அவதரித்த தினமான கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி என பல்வேறு பெயர்களில் நாளை நாடு முழுவதும் பொதுமக்கள் கொண்டாடி மகிழ போகிறார்கள்.. இதற்காக கிருஷ்ணர் சிலைகள் அமோகமாக விற்பனை ஆகி கொண்டிருக்கின்றன.
கிருஷ்ணர் மற்றும் ராதை சிலைகள் பல்வேறு வடிவங்களில் செய்யப்பட்டு ஆங்காங்கே சாலைகளிலும், மார்க்கெட்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.. இந்த சிலைகள் பல வண்ண நிறங்களில் கவர்ந்து விடுவதால், பொதுமக்கள் ஆர்வத்துடன் அவைகளை வாங்கிச் செல்கின்றனர்.. சிலைகள் ஒவ்வொன்றும் 100 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் வரையிலும் விலை போகின்றன. இதனால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications