கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் சபல மாஸ்டர்.. 3 பெண்களால் வந்த வினை.. சென்னை லாட்ஜில் நடந்த பகீர் ட்விஸ்ட்
சென்னை: சென்னை கோயம்பேடு என்றாலே எப்போதுமே ஆள் நடமாட்டமும், பரபரப்பும் நிறைந்த பிஸியான இடம்.. ,இந்த கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில், விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளில் அரங்கேறியுள்ள ஒரு சம்பவம் தான் இப்போது சென்னை காவல்துறையினரையே அதிர வைத்துள்ளது.. இதுதொடர்பான விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது..!
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (34). இவர் சென்னை தரமணியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் சமையல் மாஸ்டராகப் பணியாற்றி வருகிறார்.

சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, தன் சொந்த ஊர் தோட்டத்தில் விளைந்த கரும்பு மற்றும் மக்காச்சோளத்தை விற்பனை செய்வதற்காக சென்னை கோயம்பேடு சந்தைக்கு அப்பாவுடன் வந்துள்ளார். வியாபாரம் முடிந்ததும், அப்பா சொந்த ஊருக்குத் திரும்பிவிட, கார்த்திகேயன் தண்ணி அடித்துவிட்டு, தான் தங்கியிருக்கும் தரமணிக்குச் செல்வதற்காகக் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தார்.
அப்போது, கார்த்திகேயனுக்கு ஏற்கனவே பழக்கமான பெண் ஒருவர் அங்கு வந்து பேச்சு கொடுத்து, உல்லாசமாக இருக்கலாம் என்று அழைத்துள்ளார். அதற்கு சம்மதித்த கார்த்திகேயனை, பஸ் ஸ்டாண்டுககு வெளியே ரெடியாக நின்று கொண்டிருந்த ஆட்டோவிற்கு அந்தப் பெண் அழைத்துச் சென்றுள்ளார். அந்த ஆட்டோவிற்குள் ஏற்கனவே 2 இளம் பெண்கள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவருமாக சேர்ந்து காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு லாட்ஜுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
லாட்ஜ் ஊழியர்கள்
ஆனால், லாட்ஜ் ஊழியர்கள் கார்த்திகேயனுடன் வந்த 3 பெண்களையும் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் கார்த்திகேயன், அங்கிருந்து வெளியே வந்துள்ளார்..
உடனே, கார்த்திகேயனை அழைத்து வந்த பெண், அவரிடம் பணம் கேட்டுத் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, அந்தப் பெண்ணுடன் வந்த ஆட்டோ டிரைவரும், மற்ற 2 பெண்களும் சேர்ந்து கார்த்திகேயனைச் சூழ்ந்துகொண்டு சரமாரியாக தாக்கியிருக்கிறார்கள்.. அதுமட்டுமல்லாமல், அருகிலிருந்த கல்லை எடுத்து கார்த்திகேயனின் முகத்தில் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
அதன்பின், கார்த்திகேயனிடம் இருந்த 5000 ரூபாய் ரொக்கம் மற்றும் செல்போனைப் பறித்துக் கொண்டு, அந்த 4 பேரும், ஆட்டோவில் தப்பி சென்றுவிட்டனர்.. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த கார்த்திகேயன், கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
மொத்தம் 4 பேர்
புகாரைப் பெற்ற காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்கள்.. அதில், வழிப்பறியில் ஈடுபட்டது எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரவீன் (26), செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த நூர்ஜஹான் (19), சந்தியா (29) மற்றும் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பவித்ரா (19) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, பிரவீன் உட்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பெண்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய குழந்தைகளை மதுரவாயலில் உள்ள பெண்கள் பாதுகாப்பு மையத்தில் போலீசார் பாதுகாப்பாகத் தங்க வைத்துள்ளனர். மேலும், இந்தக் கும்பல் வேறு யாருடமாவது இதுபோன்று கைவரிசை காட்டியுள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்பேட்டின் ஹாட் டாபிக்
ஆசை யாரை விட்டது? என்று சபலப்பட்டுச் சென்று, இறுதியில் முகத்தில் அடியும் வாங்கி, பணத்தையும் பறிகொடுத்து நின்ற சமையல் மாஸ்டரின் கதை தான் இப்போது கோயம்பேட்டின் ஹாட் டாபிக்!
ஆனால், பஸ் ஸ்டாண்டு போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இதுபோன்ற குற்றச் செயல்கள் நடைபெறாமல் போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்... பயணிகளிடம் ஆசைவார்த்தை கூறி அழைத்துச் செல்லும் கும்பல்களின் நடமாட்டத்தையும் தொடர்ந்து கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம்...!!!


Click it and Unblock the Notifications
