மீண்டும் கோயம்பேடு.. பெரிய வெங்காயம் கிலோ என்ன? சென்னை கோயம்பேட்டில் "இறங்கியடித்த" சின்ன வெங்காயம்
சென்னை: சின்ன வெங்காயம் விலை ஆறுதலை தந்து கொண்டிருக்கும் சூழலில், பெரிய வெங்காயம் விலை பீதியை தந்து கொண்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம்? சென்னையிலுள்ள கோயம்பேடு வியாபாரிகள் சொல்வது என்ன?
கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா இந்த மாநிலங்களிலிருந்துதான் நமக்கு 90 சதவீதம் வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. ஆனால், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில், கனமழை பெய்து கொண்டிருக்கிறது.. இதன் காரணமாக, பெரிய வெங்காயம் விளைச்சல் அம்மாநிலங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது..

இதில், ஆந்திராவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, விளை நிலங்கள் நீரில் மூழ்கிவிட்டதால், வெங்காயத்தை மறுபடியும் அறுவடை செய்ய முடியவில்லை.
வெங்காயம்: இதனால் தமிழகத்துக்கு கொண்டு வரப்படும் வெங்காயத்தின் அளவு பாதியாக குறைந்துவிட்டதால், விலையும் உயர்ந்தபடிதயே காணப்படுகிறது.. கடந்த வாரத்தை எடுத்துக் கொண்டால், கோவை காய்கறி மொத்த மார்க்கெட்டில், ஒரு கிலோ பெரிய வெங்காயம், 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, கிலோ 58 ரூபாய், 40 ரூபாய் மற்றும் 35 ரூபாய் என்று 3 விலைகளில் விற்பனை செய்யப்பட்டது.. வெளி மார்க்கெட்டில் 10 சதவீதம் அதிகமாகவே விற்பனை செய்யப்பட்டது.
ஆந்திரா, கர்நாடகாவில் மழை தொடர்ந்து பெய்வதால், இந்த விலை மேலும் அதிகரிக்கும் என்று ஏற்கனவே வெங்காய வியாபாரிகள் கூறியிருந்த நிலையில், இந்த வாரமும் பெரிய வெங்காயம் விலை உயர்ந்தே காணப்படுகிறது.
வரத்து குறைவு: ஆந்திரா, கர்நாடகா மட்டுமல்லாமல், வட மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக காரீப் பருவ வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டு, நாட்டின் மிகப்பெரிய வெங்காய சந்தையான நாசிக்கில் பெரிய வெங்காயம் வரத்து குறைந்துள்ளதாம். இதனால்தான், கோயம்பேடு சந்தைக்கும் வெங்காயத்தின் வரத்து குறைந்து, அதன் விலை உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் கிலோ ரூ.40 ஆக விற்கப்பட்ட வெங்காயம் தற்போது ரூ.44 ஆக உயர்ந்துள்ளது. வணிக வளாக கடைகளில் கிலோ ரூ.55-க்கும், சில்லறை விற்பனை சந்தைகளில் ரூ.60-க்கும் விற்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சின்ன வெங்காயத்தின் விலை ரூ.30 ஆகவே நீடித்துள்ளது, இல்லத்தரசிகளுக்கு நிம்மதியை தந்துள்ளது.
வெங்காயம்: இதுகுறித்து கோயம்பேடு சந்தை வியாபாரிகள் சொல்லும்போது, "நாசிக்கிலிருந்து தான் வெங்காயத்தை நாம் வரவழைக்கிறோம். நாசிக்கிலேயே கிலோ ரூ.38-க்கு விற்கப்படுகிறது. லாரி வாடகை, ஏற்று கூலி, இறக்கு கூலி என செலவுகள் கட்டுப்படியாகவில்லை.. எனவே, ரூ.44-க்கு தற்போது விற்கப்படுகிறது. விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவதால், விரைவில் விலை குறைய வாய்ப்புள்ளது" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
காய்கறிகள் விலை: இதனிடையே, கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகளின் விலையும் வெளியிடப்பட்டுள்ளது.. அந்தவகையில், கேரட் ரூ.60, உருளைக்கிழங்கு ரூ.32, பீன்ஸ் ரூ.30, நூக்கல் ரூ.25, தக்காளி கிலோ ரூ.22, கத்தரிக்காய், முருங்கைக்காய், பச்சை மிளகாய் தலா ரூ.20, பீட்ரூட், அவரைக்காய் , பாகற்காய் தலா ரூ.15, முட்டை கோஸ், வெண்டைக்காய், புடலங்காய், முள்ளங்கி தலா ரூ.10 என விற்கப்பட்டு வருகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications