இறங்கிய வேகத்திலேயே ஏறிய சின்ன வெங்காயம்.. கோயம்பேட்டில் இஞ்சி பாருங்க.. சென்னையில் காய்கறிகள் விலை
சென்னை: காய்கறிகளின் விலையில் திடீரென நிறைய மாற்றங்கள் தென்பட துவங்கி உள்ளன.. என்ன காரணம்? கோயம்பேட்டில் என்ன நடக்கிறது தெரியுமா?
தமிழகத்தில் காய்கறிகள் உற்பத்தி நடந்தாலும், அவை உள்ளூர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் அளவிற்கு எப்போதுமே இருப்பதில்லை.. சிலசமயம், பருவமழை கோளாறும் காரணமாகிவிடுகிறது.

விளைச்சல்: எனவேதான், வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் தமிழகத்துக்கு கொண்டு வரப்படுகின்றன... குறிப்பாக, பெரிய வெங்காயம், தக்காளி போன்றவை கர்நாடகா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் அதிகளவு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. பருவமழை காரணமாக, காய்கறி பயிர்கள் ஏராளமாக அழிந்துவிட்டன...
முக்கியமாக தக்காளி, சின்ன வெங்காயம், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கத்திரிக்காய், கேரட், பீன்ஸ் போன்றவை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டன. அதனால், இந்த வகை காய்கறிகள் சந்தைகளுக்கு குறைவாக வர துவங்கின.. விலையும் அதிகமாகவே இருந்தது.
காய்கறிகள்: இதற்கு பிறகுதான், காய்கறிகளின் வரத்து அதிகமாகி விலையும் தமிழகத்தில் மெல்ல குறைய துவங்கியது. 10 நாட்களுக்கு முன்பு, பெரும்பாலான காய்கறிகளின் விலைகள் குறைந்திருந்த நிலையில், தற்போது அவைகளில் மாற்றம் தென்பட துவங்கி உள்ளது...
உதாரணத்துக்கு, நேற்று 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெள்ளரிக்காய், இன்று 20 ரூபாயாக அதிகரித்துள்ளது. 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட இஞ்சி, இப்போது 110 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோடை காலம் துவங்கியிருப்பதால், காய்கறிகளின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
மேலும் சில காய்கறிகளின் விலைகள் லிஸ்ட் இதுதான்:
1.எலுமிச்சை - ரூ.80/-
2.தக்காளி - ரூ.16/-
3.வெங்காயம் - ரூ.16/-
4.பீன்ஸ் - ரூ.60/-
5.பீட்ரூட் - ரூ.20/-
6.பாகற்காய் - ரூ.15/-
7.சுரைக்காய் - ரூ.10/-
8.கத்திரிக்காய் - ரூ.10/-
9.முட்டைக்கோஸ் - ரூ.10/-
10.குடை மிளகாய் - ரூ.20/-
11.கேரட் - ரூ.50/-
12.காலிபிளவர் - ரூ.10/-
13.சௌசௌ காய் - ரூ.20/-
14.தேங்காய் (ஒன்றின் விலை) - ரூ.18/-
15.கொத்தமல்லி (50 கட்டுகள்) - ரூ.100/-
16.முருங்கைக்காய் - ரூ.15/-
17.கருணைக்கிழங்கு - 15/-
18.இஞ்சி - ரூ.110/-
19.பச்சை மிளகாய் - ரூ.25/-
20.வாழைக்காய் (ஒன்றின் விலை) - ரூ.3/-
21.வெண்டைக்காய் - ரூ.20/-
22.கோவைக்காய் - ரூ.25/-
23.மாங்காய் - ரூ.20/-
24.நூக்கல் - ரூ.10/-
25.சாம்பார் வெங்காயம் - ரூ.25/-
26.உருளைக்கிழங்கு - ரூ.15/-
27.முள்ளங்கி - ரூ.20/-
28.அவரைக்காய் - ரூ.20/-
29.புடலங்காய் - ரூ.10/-
30.சேனைக்கிழங்கு - ரூ.5/-
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications