ஆசை ஆசையா பெண்ணுக்காக ரூம் போட்டு.. சென்னையில் போலீசில் ஏடாகூடமாக சிக்கி.. அந்த சார் யார்னு பாருங்க
சென்னை: பூந்தமல்லி பகுதியை சேர்ந்த அந்த பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது.. குழந்தையும் உள்ளது.. இந்நிலையில், இந்த பெண், கடந்த மாதம் ஆவடிக்கு பணி நிமித்தமாக டூவீலரில் வந்துள்ளார். ஆவடி செக்போஸ்ட் அருகே டூவீலரை அங்கேயே நிறுத்திவிட்டு, வேலை விஷயமாக சென்றுள்ளார்..
பிறகு வேலை முடிந்து வந்து பார்த்தபோது, நிறுத்தியிருந்த இடத்தில் டூவீலரை காணவில்லை.. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தன்னுடைய டூவீலரை காணவில்லை என்று ஆவடி போலீசுக்கு சென்று புகார் அளித்தார்.

காணாமல் போன டூவீலர்
இந்த புகாரின்பேரில் போலீசாரும், வழக்குப்பதிவு செய்து டூவீலரையும், அதை திருடியவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்... இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு, டூவீலர் கிடைத்துவிட்டதாக, ஆவடி போலீஸ்காரர் ஹரிதாஸ் என்பவர், அந்த பெண்ணுக்கு போன் செய்து சொல்லி உள்ளார்.. அத்துடன், ரூ.15,000 பணம் வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது.
அதற்கு அந்த பெண், தன்னிடம் ரூ.5,000 மட்டுமே இருப்பதாக சொல்லவும், அதற்கு ஹரிதாஸ் சம்மதித்திருக்கிறார்.. எனவே, பணத்தை வாங்குவதற்காக அந்த பெண்ணை நேரில் வரவழைத்துள்ளார்.. அப்போது கூடுலாக ரூ.2,000 வாங்கி கொண்டாராம் ஹரிதாஸ்.. பிறகு, அந்த பெண்ணிடம், டூவீலரை மிகவும் கஷ்டப்பட்டு தேடி பிடித்தோம் என்று மெல்ல பேச்சை வளர்த்துள்ளார்..
தனிமையில் உல்லாசம்
பிறகு திடீரென, "உன் மீது எனக்கு ஆசையாக இருக்கு.. என்னுடன் தனிமையில் நீ உல்லாசமாக இருக்க வேண்டும். ஆவடியில் உள்ள நீச்சல் குளம், பார் வசதி உள்ள பிரபல லாட்ஜ்ஜில் உனக்காக ரூம் போட்டிருக்கிறேன்.. அங்கு வரவேண்டும்" என்று அழைத்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், உடனே இதுகுறித்து தன்னுடைய அண்ணனிடம் சொல்லியிருக்கிறார்.. இதையடுத்து, போலீஸ்காரர் சொன்ன அந்த லாட்ஜூக்கு, அந்த பெண், தன்னுடைய அண்ணனை அழைத்து சென்றுள்ளார். அங்கு, போலீஸ்காரரிடம் இதுகுறித்து அண்ணனும், தங்கையும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இதனால் வாக்குவாதம் முற்றியிருக்கிறது.
கலாட்டா - செல்போன் நம்பர்
இவர்கள் செய்த கலாட்டாவை பார்த்த லாட்ஜ் விடுதி நிர்வாகத்தினர், உடனே போலீசுக்கு தகவல் தந்துள்ளனர்.. போலீசாரும் சம்பந்தப்பட்ட லாட்ஜுக்கு வந்து, போலீஸ்காரரை மீட்டு ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.. இதற்கு பிறகு, பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய அண்ணனுடன் சென்று, ஆவடி காவல் உதவி ஆணையரிடம் புகார் தந்தார்.
அந்த புகாரில், "என் கணவரின் இருசக்கர வாகனம், கடந்த 13ம் தேதி இரவு, ஆவடியில் மதுக்கூடம் அருகே திருடு போனது. இது குறித்து ஆவடி குற்றப்பிரிவில் நான் புகார் அளித்தேன். போலீசார், கணவரின் வாகனத்தை, பட்டாபிராம், காந்தி நகர் அருகே கண்டுபிடித்து, என்னிடம் ஒப்படைத்தனர்.இந்நிலையில், ஆவடி குற்றப்பிரிவில் பணிபுரியும் காவலர் ஹரிதாஸ் (30) என்பவர், என் மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டார்.
நீ அழகாக இருக்கிறாய்
அப்போது, 'நீ அழகாக இருக்கிறாய், ஆவடி செக்போஸ்ட் அருகே உள்ள விடுதிக்கு தனியாக வா' என அழைத்தார். என் அண்ணன் உதவியுடன், அங்கு சென்று காவலர் ஹரிதாசை பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இந்த புகாரின்பேரில், ஆவடி மகளிர் போலீசார் ஹரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.. தொடர்ந்து விசாரணையையும் நடத்தி கொண்டிருக்கிறார்கள். புகார் தர வந்த பெண்ணிடமே போலீஸ்காரர் அத்துமீறிய சம்பவம் சென்னையில் பரபரப்பை உண்டு பண்ணி வருகிறது. அத்துடன் போலீஸ்காரர் லாட்ஜில் வாக்குவாதம் செய்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பைக் டாக்ஸியில் ஏறிய துணிக்கடை பெண்.. மேகாலயா டூ சென்னை! நடுரோட்டில் அலறிய பெண்! டிரைவர் செய்த பகீர் -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
திருச்சி லாட்ஜில் காதலிக்கு போடப்பட்ட போதை ஊசி.. காதலன், நண்பனை விசாரித்தால் திடுக்கிடும் தகவல்கள் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications