சென்னை கூடுவாஞ்சேரியில் காதலியை கட்டிப்பிடித்து முத்தம் தந்து.. சட்டையை வேற காணோமே.. கண்ணே கூசுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் பிரதான சாலையில், டூவீலரில் சென்ற காதல் ஜோடியின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக, கடந்த 2 நாட்களாகவே அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது. யாரிந்த ஜோடி? என்ன நடந்தது தலைநகரில்?

2 நாட்களுக்கு முன்பு இணையத்தில் ஒரு வீடியோ திடீரென பரவியது.. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் சட்டை எதுவும் இல்லாமல், மதுபோதையில் நடுரோட்டில் தடுமாறி ஓடுகிறார்.. அங்கேயும் இங்கேயும் ஓடும் இளைஞர், அங்கிருந்த பெண்ணை நடுரோட்டிலேயே கட்டிப்பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்...

Guduvanchery Chennai Love Couple

கடைகள்: இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, அவர்களை தடுக்க முயன்றுள்ளனர்.. ஆனால், அவர்களை தகாத வார்த்தைகளால் அவர்கள் திட்டியதாக கூறப்படுகிறது. சுற்றிலும் அத்தனை பேர் பார்க்கிறார்கள் என்று தெரிந்தும்கூட, அந்த பெண்ணை கட்டிப்பிடித்தவாறே, அங்குள்ள கடைகளின் முன்பு நடந்து செல்கிறார்.. நடைபாதை வியாபாரிகள் முதல் பொதுமக்கள் வரை இவர்களை எப்படி தடுத்து நிறுத்துவது என்று தெரியாமல் விழிக்கிறார்கள்..

அதேபோல, அரை நிர்வாணத்துடன் இளைஞர் ஒருவர், பைக்கில் தன்னுடைய காதலியை உட்கார வைத்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.. காதலியை கட்டிப்பிடித்துக் கொண்டும், முத்தம் கொடுத்து கொண்டும் நடுரோட்டிலேயே அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார்.. இதனை கண்ட அந்த வழியாக சென்ற பொதுமக்கள், முகம் சுழித்துக் கொண்டே போனார்கள்.. இந்த காட்சிகளைதான், அங்கிருந்த இளைஞர் ஒருவர் வீடியோவாக எடுத்து, சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்..

உச்சக்கட்ட போதை: உச்சக்கட்ட போதையில், அரை நிர்வாண கோலத்தில், நடுரோட்டில் பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சம்பவம் சென்னை நகரில் பெரும் பரபரப்பையும், கொதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

இப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு, தாம்பரம், பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில், காரில் சென்று கொண்டிருந்த ஜோடி ஒன்று அட்ராசிட்டியில் இறங்கியிருக்கிறது.

கார் கண்ணாடி: கருப்பு நிற காரின் மேற்கூரையில் உள்ள கண்ணாடியை திறந்து, வெளியே வந்த காதல் ஜோடி, திறந்த வெளியிலேயே நின்றுகொண்டே கொஞ்சி கொண்டார்கள்.. அப்போது அந்த இளைஞரின் கையில் பீர் பாட்டில் இருந்தது.. இவ்வளவு பிஸியான ரோட்டில், அதுவும் பரபரப்பான பிஸி நேரத்தில், ஏராளமான வாகனங்கள் சாலையில் சென்று கொண்டிருந்தன.

இந்த கருப்பு கலர் காருக்கு பின்னாடியும் ஏராளமான வாகனங்கள் வரிசைகட்டி நெருக்கி கொண்டிருந்தன. ஆனால், எதை பற்றியுமே இந்த காதல் ஜோடிகள் கண்டுகொள்வதில்லை.. பொதுவெளி என்றும் பார்ப்பதில்லை.. பட்டப்பகல் என்றும் பார்ப்பதில்லை.. உச்சக்கட்ட அநாகரீகத்தில் நடந்து கொள்கிறோமே என்றும் பார்ப்பதில்லை..

முகம்சுழிப்பு:
நாளுக்கு நாள், நடுரோட்டிலேயே காதல் ஜோடியின் அலப்பறைகளும் தாங்க முடிவதில்லை. பைக்கில் காதலியுடன் இவர்கள் செல்லும்போது, 2 பேருமே ஹெல்மெட் போடுவதில்லை.. இதுபோன்று பொதுவெளியில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதுடன், பொதுமக்கள் முகம்சுழிக்கும் வகையிலும் நடந்து கொள்வோர் மீது, போலீசார் நடவடிக்கை எடுத்ததால் நல்லா இருக்கும்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+