சென்னை – மாமல்​லபுரம் – கடலுார், திண்​டிவனம் – திரு​வண்​ணா​மலை.. 4 ரயில் பாதைகளுக்கு எவ்வளவு தொகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்​தில் நடை​பெறும் 10 புதிய ரயில் பாதை திட்​டங்​களில், 4 திட்​டங்​களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் மட்​டுமே ஒதுக்கி இருக்கிறது மத்திய அரசு . திண்​டிவனம் - செஞ்​சி- திரு​வண்​ணா​மலை (70 கி.மீ.) அத்​திப்​பட்டு - புத்​தூர் (88.30 கி.மீ.), ஈரோடு - பழனி (91.05 கி.மீ.), சென்னை - மாமல்​லபுரம் - கடலுார் (179.28 கி.மீ.) ஆகிய புதிய பாதை திட்​டங்​களுக்கு தலா ஒரு கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. இந்த தகவல்கள் ஆர்டிஐயின் கீழ் சமூக ஆர்​வலர் தயானந்த் கிருஷ்ணன் என்பவர் கேட்டதற்கு தெரியவந்தது.

திண்டுக்கல் - கரூர் - சேலம், ஓசூர் - ஓமலூர், அரக்கோணம் - ரேணிகுண்டா ஆகிய 3 தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தது. வரும் நிதியாண்டில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படு பணிகள் படிப்படியாக நடைபெற இருக்கிறது. இந்த மூன்றுமே பல ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்த திட்டங்கள் ஆகும். அதேநேரம் மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Chennai Mamallapuram Cuddalore Tindivanam Tiruvannamalai Just 1 for the railway lines

சென்​னையைச் சேர்ந்த சமூக ஆர்​வலர் தயானந்த் கிருஷ்ணன் என்பவர் தகவல் அறி​யும் உரிமை சட்​டத்​தின் கீழ், தெற்கு ரயில்​வே​யில் நடை​பெறும் திட்​டங்​களுக்​கு, மத்​திய பட்​ஜெட்​டில் ஒதுக்​கீடு செய்​துள்ள நிதி விபரங்​களை கேட்​டிருந்தார். அதில் தமிழ்நாட்டில் மொத்​தம் 870.78 கி.மீ. தொலை​வுக்கு 10 புதிய ரயில் பாதை திட்​டங்​களுக்​கு, நடப்பு பட்​ஜெட்​டில் ரூ.497.57 கோடி மட்​டுமே ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டிருப்பதாகவும், இதுஇதற்கு முந்​தைய பட்​ஜெட்டை ஒப்​பிடு​கை​யில், 19.48 சதவீதம் குறை​வாக இருக்​கிறது என்பதும் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.

திண்​டிவனம் - செஞ்​சி- திரு​வண்​ணா​மலை (70 கி.மீ.) அத்​திப்​பட்டு - புத்​தூர் (88.30 கி.மீ.), ஈரோடு - பழனி (91.05 கி.மீ.), சென்னை - மாமல்​லபுரம் - கடலுார் (179.28 கி.மீ.) ஆகிய புதிய பாதை திட்​டங்​களுக்கு தலா ஒரு கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது தெரிய​வந்​திருப்பதாக சமூக ஆர்​வலர் தயானந்த் கிருஷ்ணன் கூறியுள்ளார். அதேபோல் புதிய ரயில் பாதைகளுக்​காக ஒதுக்​கப்​பட்ட ரூ.497.57 கோடி​யில் வெறும் இரண்டு திட்​டங்​கள் மட்​டுமே மொத்த நிதி​யில் 87.4 சதவீதம் பெற்​றுள்​ளதாக குறிப்பிட்ட அவர், தமிழகத்​தில் இரட்டை பாதை-கூடு​தல் பாதை திட்​டங்​கள் மிகக்​கடுமை​யான நிதிச்​சரிவை சந்​தித்​திருக்கிறது என்றும் கூறினார்.

14 இரட்​டைப்​பாதை- கூடு​தல் பாதை திட்​டங்​களின் (658.34 கி.மீ.) மொத்த மதிப்​பீடு ரூ.8,173.35 கோடி என்றும் ஆனால் 2026-27-ம் நிதி​யாண்​டில் வெறும் ரூ.324.10 கோடி மட்​டுமே ஒதுக்​கப்​பட்​டுள்​ளதாகவும் புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி சமூக ஆர்​வலர் தயானந்த் கிருஷ்ணன் கூறினார்.

காட்​பாடி - விழுப்​புரம், சேலம் - கரூர் - திண்​டுக்​கல், ஈரோடு - கரூர் ஆகிய 3 முக்​கிய திட்​டங்​களுக்​கான நிதி ரூ.400.45 கோடி​யில் இருந்து ரூ.12 கோடி​யாகக் குறைக்​கப்​பட்​டுள்ளதாக குற்றம்சாட்டிய சமூக ஆர்வலர், இந்த திட்டத்திற்கு நிதி குறைக்​கப்​பட்​டுள்​ள​தால், புதிய, இரட்​டை​பாதை பணி​கள் பின்​னடைவை சந்​தித்​துள்​ளன என்றார்.

இதேபோல் , இரட்டை பாதை திட்​டங்​களுக்​கும் குறை​வான நிதியே வழங்​கப்​பட்​டுள்​ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் தமிழகத்​தில் ரயில்வே திட்​டங்​களுக்​கு, நிலம் கையகப்​படுத்​து​வ​தில் தாமதம் செய்து வரு​வ​தாக ரயில்வே நிர்​வாகம் குற்​றச்​சாட்டியிருக்கும் அதே வேளையில், புதிய ரயில் பாதை திட்​டங்​களுக்கு போதிய நிதி​யும் ஒதுக்​காதது அம்பலமாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+