குளிக்கும்போது வீடியோகால்.. பெண் குரலில் பேசிய இளைஞர்.. வீடியோவை காட்டி மிரட்டி.."வெட்டி" மகேஷ் கைது

சிறுமியை மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குளிக்கும்போதே இன்ஸ்ட்ராகிராமில் வீடியோகால் மூலம் சிக்கி உள்ளார் சிறுமி.. பெண் குரலில் தன்னுடன் பேசுவது ஆண் என்றே தெரியாமல், கடைசியில் இந்த குளிக்கும் வீடியோவை வைத்தே சிறுமி மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் அந்த மாணவி.. 16 வயதாகிறது.. இளம் வயது என்பதால் எப்போதுமே சோஷியல் மீடியாவில் குறிப்பக இன்ஸ்ட்டாகிராமிலேயே மூழ்கி இருந்துள்ளார்.

அப்படித்தான் இளைஞர் ஒருவர் சிறுமிக்கு அறிமுகமாக உள்ளார்.. ஆரம்பத்தில் சிறுமியிடம் மெல்ல மெல்ல பேச்சு தந்த இளைஞன், இறுதியில் அந்தரங்கமான விஷயத்தில் வந்து நின்றார்.. எப்பவுமே பாலியல், ஆபாசம், டபுள் மீனிங் பேச்சுக்கள்தான்.. நாளுக்கு நாள் இப்படி பேசுவதை கண்ட சிறுமி அதிர்ச்சி அடைந்து, பேச்சைக் குறைக்க ஆரம்பித்தார்.

நெருக்கம்

நெருக்கம்

இதனிடையே, சிறுமிக்கு கவுசல்யா என்பவர் இன்ஸ்டாகிராமில் அறிமுகமானார்.. கவுசல்யாவிடம் நாளடைவில் நெருக்கமாகியும் விட்டார்.. ஒருகட்டத்தில் பெண் என்பதால் அந்தரங்க விஷயங்களையும் சிறுமி பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்.

கௌசல்யா

கௌசல்யா

ஒருமுறை இப்படித்தான் இன்ஸ்ட்டாகிராமிலேயே பாத்ரூமில் குளித்துக் கொண்டு இன்ஸ்டாகிராமில் பேசியும் உள்ளார்.. இதற்கு பிறகுதான் கவுசல்யா நேரடி ரூபத்தை வெளிப்படுத்தினார்.. இவ்வளவு நாள் சிறுமியிடம் கவுசல்யாவாக பேசி கொண்டிருந்தது, ஏற்கனவே பழகிய அந்த இளைஞர்தான்.. கௌசல்யா என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் போலியான அக்கவுண்ட் ஆரம்பித்து பழகி உள்ளதை கண்டு அதிர்ந்தார் சிறுமி.

மகேஷ் கைது

மகேஷ் கைது

குளிக்கும்போது சிறுமிக்கே தெரியாமல் வீடியோவை எடுத்துள்ளார்.. அந்த வீடியோவை காட்டி, தன் ஆசைக்கு இணங்குமாறு சிறுமியிடம் அந்த இளைஞர் நேரடியாகவே மிரட்டி உள்ளார். சிறுமி பயந்துபோய், இந்த விஷயத்தை பற்றி தன் அம்மாவிடம் அழுதுகொண்டே சொல்லவும், கொதித்து போன அவர் அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில் விசாரணை துரிதமாக நடந்தது.. இறுதியில், மணலி புதுநகரைச் சேர்ந்த மகேஷ் என்ற அந்த நபரை மடக்கினர்.

பிளாக்மெயில்

பிளாக்மெயில்

டிகிரி வரை படித்துள்ள மகேஷ் வேலை வெட்டிக்கு போவது கிடையாது.. எந்நேரமும் சோஷியல் மீடியாவிலேயே பொழுதை கழித்து.. இளம்பெண்கள் யாராவது இப்படி சிக்குவார்களா என்று பார்த்து, பிளாக்மெயில் செய்வதுதான் முழு நேரமாக இருந்திருக்கிறார்... போக்சோவில் கைதான மகேஷ் இப்போது ஜெயிலில்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+