உஷாராக இருக்கும் சென்னை.. கேரள பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை.. பெங்களூரு சம்பவத்தை மறக்கக்கூடாது!
சென்னை : கேரளாவில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதனால் உஷார் அடைந்துள்ள தமிழக அரசு. சென்னைக்குள் கொரோனா பரவுவதை தடுப்பதற்காக, சென்னைக்கு நகருக்கு வரும் கேரளா பயணிகளுக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கட்டாய ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி வருகிறது.
கேரள பயணிகளுக்கு கட்டாய கொரோனா சோதனை நடத்தும் அரசு. அவர்களிடம் செல்போன் நம்பருடன் ஆதார் தகவல்களை சரியானது தானா என்பதை உறுதிபடுத்திவிட்டு சேகரிப்பது நல்லது என்று கோரிக்கை எழுந்துள்ளது. அப்போது தான் அவர்களை கண்டுபிக்க வசதியாக இருக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்,
ஏனெனில் நாட்டிலேயே கேராளவில் தான் கொரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் உள்ளது. கேரளாவில் வியாழக்கிழமை மாலை நிலவரப்படி 22,040 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 117 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர். கேரளாவில் 1,77,924. பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் கட்டாயம்
கேரளாவில் கட்டுக்கடங்காமல் கொரோனா தொற்று பரவி வருவதால் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்கள் கேரள பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் ஆக்கி உள்ளன. தமிழகத்திலும் இதே நடைமுறை பின்பற்றப்படுகறிது.

சென்னை மாநகராட்சி
இந்நிலையில் தற்போது 80 லட்சத்துக்கு மேல் இருக்கும் சென்னையில் தொற்று எண்ணிக்கை 200 க்குள் உள்ளது. இந்நிலையில் கேரளாவில் இருநது உள்ளே வந்து பரப்பி விட்டால் சிக்கலாகிவிடும் அதனால் சென்னை மாநகராட்சி உஷாராக உள்ளது. சென்னைக்கு நகருக்கு வரும் கேரளா பயணிகளுக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கட்டாய ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி வருகிறது.

பெங்களூரு
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் அவர்கள் அளிக்கும் செல்போன் எண்கள், முகவரி போலியாக இருக்கவும் வாய்ப்புள்ளது. பெங்களூருவில் இப்படித்தான் நடந்தது. போலி செல்போன் எண் கொடுத்தவர்கள் பின்னர் கொரோனா என தெரியவந்து தேடியபோது சிக்கவில்லை. ஆகவே மாநகராட்சி அதிகாரிகள் செல்போன் எண், ஆதார் உள்ளிட்ட விவரங்களை சரியானது தானா என்பதை சேகரிக்கும்போது உறுதிப்படுத்திவிட்டால் சரியாக இருக்கும்.
Recommended Video

கொரோனா
இதேபோல் கேரளாவிலிருந்து கன்னியாகுமரி, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிக அளவில் கேரளாவில் இருந்து வருகிறார்கள். அவர்களையும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்வது நல்லது என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஏனெனில் இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டினால் பெரிய ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மீண்டும் கொரோனா அலையை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கையைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டியதுஅவசியம் ஆகும். இல்லாவிட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளும், கொரோனா பாதிப்புகளும் தவிர்க்க முடியாததாக மாறிவிடும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications