மாங்காடு Exclusive: தவறு செய்வது ஆண்கள்.. ஆனால் தண்டனை மட்டும் பெண்களுக்கா?.. நண்பர்கள் சரமாரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்களை சகோதரியாக நினைக்காமல் காம பொருளாக நினைத்து தவறுகளை செய்வது ஆண்கள், ஆனால் தண்டனை மட்டும் பெண்களுக்கா என சென்னை மாங்காடு பெண்ணின் நண்பர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

Recommended Video

    Maangadu Girl Case..அம்மா கடைக்கு சென்ற நேரத்தில்...பின்னணி! | Oneindia Tamil

    இதுகுறித்து மாணவியுடன் படித்த மாணவர்கள் ஒன் இந்தியா தமிழிடம் பேசுகையில், இது போன்ற பாலியல் தொல்லைகள் நிறைய இடங்களில் நடந்துள்ளன. எம்எல்ஏ, எம்பிக்கள் உள்ளிட்ட பெரிய வீட்டு பெண்களுக்கு இது போல் நேர்ந்தால் எந்த அளவுக்கு வழக்கு சீரியஸாக போகுமோ அந்த அளவுக்கு இந்த வழக்கு போக வேண்டும்.

    நாங்கள் வீடுகளை விட்டு விடுதியில் தங்கி படிக்கிறோம். இப்படி இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு எப்படி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண், அதை அடுத்து இன்னொரு பெண், இப்ப எங்களுக்குள்ளேயே ஒரு பெண். நாங்கள் யாரை நம்புவது?

    உடன்பிறப்புகள்

    உடன்பிறப்புகள்


    இந்த காலத்தில் கூட பொறந்தவர்களையே தங்கையாகவோ அக்காவாகவோ பார்க்காத நிலையில் வேறு வயிற்றில் பிறந்தவர்களை எப்படி பார்ப்பார்கள்? நமக்கு தெரிந்து இத்தனை பெண்கள் இருக்கிறார்கள். தெரியாமல் எத்தனை பெண்கள் இருக்கிறார்களோ. இன்னும் எத்தனை பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருக்கிறார்களோ.

    தண்டனை

    தண்டனை

    இனி ஒரு பெண்ணை தவறாக நினைத்தாலே உயிர் பயம் ஏற்படும் அளவுக்கு தண்டனை கொடுக்கப்பட வேண்டும். ஒரு பெண் பாதுகாப்பாக இருப்பதற்கு ஒரு சட்டத்தை கொண்டு வருவதுதானே முக்கியம். மற்றவைகளுக்காக சட்டங்களை கொண்டு வந்து ஒரு பயனும் இல்லை. சட்டங்களை கடுமையாக்கப்பட வேண்டும்.

    அநீதி

    அநீதி

    பெண்களும் தங்களுக்கு நடக்கும் அநீதி குறித்து நம்பிக்கையானவர்களிடம் தெரிவிக்க வேண்டும். பெண்களை தவறாக பார்ப்பவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும். எதற்காக அவர்கள் உயிரோடு இருக்க வேண்டும்? தவறு செய்தது ஆண்கள், ஆனால் தண்டனை பெண்களுக்காக?

    அநீதி

    அநீதி

    தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே இது போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். மனைவியை தவிர மற்ற பெண்களை தவறான நினைப்புடன் தொடுவதற்கு அச்சமடையும் வகையில் தண்டனை கொடுக்க வேண்டும். மற்ற நாடுகளில் எல்லாம் பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக உள்ளன. இங்கு மட்டும் ஏன் இப்படி தண்டனைகள் இல்லாமல் இருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+