சென்னை கட்டட விபத்து..மீட்புப்பணி தீவிரம்..சிக்கியவர்களை உயிரோடு மீட்போம்..ககன் தீப் சிங் பேடி உறுதி
சென்னை: மண்ணடியில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. சென்னை மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புப்படையினரை வரவழைத்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை விரைவில் உயிரோடு மீட்க நடவடிக்கை எடுப்போம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

சென்னை பாரிமுனையில் அரண்மனை 4வது தெருவில் 4 மாடி கட்டடம் ஒன்று புதுப்பித்தல் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இடிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 7 தீயணைப்பு வண்டிகளில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டட இடிபாடுகள் 5 பேர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பாதுகாப்பு நலன் கருதி கட்டட விபத்து நடந்த இடத்தைச் சுற்றி இருக்கும் பொது மக்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
கட்டட விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வந்து சென்னை மேயர், ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் மேற்பார்வையிட்டனர். கட்டடம் இடிந்த இடம் குறுகிய பகுதி என்பதால் மீட்புப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை உயிரோடு மீட்க முயற்சி செய்வதாக ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். எத்தனை நபர்கள் உள்ளே சிக்கியுள்ளனர் என தெரியவில்லை எனவும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரின் உதவி கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வந்த பின்னர் மீட்புப்பணிகள் தீவிரமடையும் எனவும் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
80 ஆண்டு பழமையான கட்டடத்தை பராமரிப்பு செய்ய சென்னை மாநகராட்சியிடம் எந்த அனுமதியும் பெறவில்லை எனவும், கட்டட உரிமையாளர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
-
திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டடம்.. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்க சான்ஸ்.. டெல்லி சோகம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications