சென்னையில் திடீரென கொட்டி தீர்க்கும் கனமழை.. சூறைக்காற்றுடன் மோசமான வானிலை.. விமான பயணிகள் அவதி
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை முதல் வெயில் என்பது வெளுத்து வாங்கியது. ஆனால் மதிய வேளையில் பல இடங்களில் வானிலை முற்றிலுமாக மாறியது. கருமேகங்கள் சூழ்ந்து மழைக்கான பெய்யும் வகையில் வானிலை மாறிய நிலையில் மாலை 4.30 மணி முதல் சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. கோடை வெயிலால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த மழை சற்று நிம்மதியை கொடுத்துள்ளது. இதற்கிடையே தான் திடீரென பெய்த கனமழையின் காரணமாக சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்களும், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் என்பது கொளுத்தி வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை கோடை வெயில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே தான் இன்று முதல் கத்திரி வெயில் காலமும் தொடங்கியது.

இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மதிய வேளைகளில் வீடுகளில் ஏசி, பேன் இன்றி பொதுமக்களால் இருக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.
இதற்கு சென்னையும் விதிவிலக்கல்ல. சென்னையிலும் வெயில் என்பது அதிகமாக தான் உள்ளது. இன்று காலையிலும் வழக்கம்போல் வெயில் என்பது அதிகரித்தது. ஆனால் மதிய வேளையில் வானிலை முற்றிலுமாக மாற தொடங்கியது. சென்னையின் பல இடங்களில் கருமேகங்கள் சூழ தொடங்கின. சூறைக்காற்று வீச தொடங்கியது. இதனால் மழைக்கான வாய்ப்பு உருவானது.
அதன்படி இன்று மாலை சுமார் 4.30 மணி முதல் சென்னையின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை ஆயிரம் விளக்கம், தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை, பள்ளிக்கரணை, மேடவாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை பல்லாவரம், வண்டலூர், முடிச்சூர், சேலையூர் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
காலை முதல் வெயில் அதிகமாக இருந்த நிலையில் இந்த திடீர் மழை வெப்பத்தை தணிக்கும் வகையில் உள்ளதால் மக்கள் ஹேப்பியாகி உள்ளனர். சென்னையில் திடீரென்று மோசமான வானிலை காரணமாக விமான சேவையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
கனமழை மற்றும் சூறைக்காற்று உள்ளிட்டவற்றால் சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் வானில் வட்டமடித்தன. சிங்கப்பூர், மதுரை, கோவை, சூரத், திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை வந்த விமானங்களால் உடனடியாக தரையிறங்க முடியவில்லை. மொத்தம் 11 விமானங்கள் பாதிக்கப்பட்டன. இந்த விமானங்கள் வானிலையே வட்டமடித்தன. இதில் சில விமானங்கள் திருச்சி விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
அதேபோல் சென்னையில் இருந்து டெல்லி, சேலம், கொழும்பு, கவுகாத்தி, கோவை உள்பட பிற இடங்களுக்கு செல்ல வேண்டிய 11 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. இதனால் விமான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications