சென்னையில் இரவோடு இரவாக.. அசத்திட்டாங்களே.. ரோடு ரோடாக களமிறக்கப்பட்ட அதிகாரிகள்.. வாவ்
சென்னை: கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜிசிசி) மீண்டும் மாஸ் கிளீனிங்கை தொடங்கி உள்ளது. அனைத்து மண்டலங்களிலும் மாஸ் கிளீன் அப் மீண்டும் தொடங்கி உள்ளது. இரவு நேரங்களில் மிக தீவிரமாக மாஸ் கிளீன் அப் செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதன்படி கைவிடப்பட்ட வாகனங்களை பெருமளவில் சுத்தம் செய்து அகற்றும் என ஆணையர் ஜே. குமரகுருபரன் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக ஜூலை 22ம் தேதி பைலட் திட்டமாக சென்னையில் 3 மண்டலங்களில் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன.

நேற்று இரவு முதல் சென்னையின் அனைத்து பக்கங்களிலும் மீண்டும் சுத்தம் செய்ய தொடங்கி உள்ளனர். சென்னையில் கைவிடப்பட்ட வாகனங்களை நீக்க முடிவு செய்துள்ளனர். சாலை ஓரம் உள்ள மண், குப்பை தீவிரமாக அகற்றப்பட்டு வருகிறது. மீண்டும் பருவமழை வீரியம் அடையும் முன் மற்றொரு சுற்று வெகுஜன சுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சோதனை: முன்னதாக, அண்ணாநகர், ராயபுரம், அடையாறு உள்ளிட்ட பல மண்டலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாயக்கூடங்களில் உள்ள பல்வேறு மீட்பு மையங்கள் மற்றும் சமையலறைகளை ஆணையர் ஆய்வு செய்தார். இந்த மையங்களில் மின்சாரம், குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, கழிப்பறைகள், ஜெனரேட்டர்கள் போன்ற அத்தியாவசிய வசதிகள் இருப்பதை உறுதி செய்ய மருத்துவ அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதேபோல் ஆனையிறவுப் பாலம் (39.73 கோடி மதிப்பில்), கணேசபுரத்தில் ரயில்வே மேம்பாலம் (₹226.5 கோடி), போஜராஜா நகர் லெவல் கிராசிங் (₹30.13 கோடி) உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைந்து முடிக்க அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.
மேலும், கண்ணப்பர் திடலில் ₹6.20 கோடி மதிப்பிலான விளையாட்டு மைதானம் மற்றும் ஆண்ட்ரூஸ் தேவாலய வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை திரு.குமரகுருபரன் பார்வையிட்டார். வடகிழக்கு பருவமழை தயார்நிலை - மழைநீர் வடிகால்களை தூர்வாருதல் மற்றும் மீட்பு பணிகளுக்கு வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருப்பது குறித்து அவர் அறிவுறுத்தினார்.
அதிரடி ஆக்சன்: சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் ஐஏஎஸ் பதவி ஏற்ற சில வாரங்களில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முக்கியமாக வெறும் ஒரு வாரத்தில் சென்னையில் அதிரடி ஆக்சன்களை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி) மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் குப்பைக் கட்டுப்பாட்டை அவுட்சோர்ஸ் செய்ய முடிவு செய்துள்ளது. அதாவது தற்போது அரசே மேற்கொள்ளும் தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
ராயபுரம் மற்றும் திரு வி க நகர் - மண்டலங்கள் 5 மற்றும் 6-ல் உள்ள திடக்கழிவு மேலாண்மையை குடிமை அமைப்பு சமீபத்தில் தனியாரிடம் ஒப்படைத்ததை அடுத்து மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் திடக்கழிவு மேலாண்மையை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
இரண்டு மண்டலங்களையும் தனியார் மயமாக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஜி.சி.சிதான் கடற்கரைகளை கவனித்து வருகிறது. கடற்கரைகளில் திடக்கழிவு மேலாண்மை தனியார்மயமாக்கலுக்கான டெண்டர்கள் மண்டலம் 5 மற்றும் 6 க்கான டெண்டர் செயல்முறையுடன் எடுக்கப்பட்டு வெற்றிகரமான ஏலதாரருக்கு மாற்றப்படும்.
மாநகராட்சி இந்த செயல்முறையை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடற்கரையை சுத்தம் செய்ய ஹெவி டியூட்டி மெக்கானிக்கல் துப்புரவுப் சாதனங்களை பயன்படுத்துவார்கள்" என்று ஜிசிசி கமிஷனர் ஜே குமரகுருபரன் தெரிவித்து உள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications