அதிகாரம் செலுத்தும் கவுன்சிலர் கணவர்கள்... சாட்டையை சுழற்றிய சென்னை மேயர் பிரியா - வெளியேற உத்தரவு
சென்னை: தண்டையார்பேட்டை மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்களின் உறவினர்கள், நண்பர்கள் வெளியேறுமாறு சென்னை மேயர் பிரியா ஒலிபெருக்கியில் அறிவித்ததால் அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறினார்.
Recommended Video
உள்ளாட்சித் தேர்தல் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை அடுத்து உள்ளாட்சி மன்றங்கள் ஆண்களுக்கு நிகராக பெண்களின் பலமும் உள்ளது. ஆனால், பெண்கள் தேர்தலில் நிற்க வைத்து வெற்றிபெற்றவுடன் அவர்களின் கணவர்கள் அல்லது உறவினர்கள் அதிகாரம் செலுத்துவதாக புகார் எழுந்தது.

கிராமங்களில் மட்டுமின்றி சென்னை மாநகராட்சி மண்டல கூட்டங்களிலும் பெண் மாமன்ற உறுப்பினர்களின் கணவர்கள் மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது சென்னை மேயர் பிரியாவின் காதுகளுக்கும் எட்டியுள்ளது.
இந்த நிலையில், சென்னை தண்டையார்பேட்டை மண்டலம் 4 ல் அமைந்துள்ள காலரா மருத்துவமனையில் 34 முதல் 48 வரை உள்ள வார்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எபிநேசர், ஐட்ரீம் மூர்த்தி உள்ளிடோரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா இன்றைய கூட்டத்தில் பெண் மாமன்ற உறுப்பினர்களின் நண்பர்களோ உறவினர்களோ இருந்தால் அரங்கத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார். இது ஒலிப்பெருக்கி மூலமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கூட்டத்திற்கு வந்த பெண் மாமன்ற உறுப்பினர்களின் கணவர்கள் உறவினர்கள் கட்சி பாகுபாடின்றி வெளியேறினர்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications