இனி அந்த பக்கமே போகாதீங்க.. சென்னையில் இடிக்கப்படும் பெரிய பாலம்! பட்ஜெட்டில் மேயர் ப்ரியா அறிவிப்பு
சென்னை: சென்னையில் உள்ள முக்கியமான பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் அதே பகுதியில் கட்டப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கான 2024 - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. சென்னை மாநகர பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்தார். 2024- 25 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 82 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார் மேயர் பிரியா.

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல ரூ.47.25 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்யப்படும். சென்னை மாநகராட்சியில் 2024-25ம் ஆண்டு முதல் மாமன்ற உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதி ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.45 லட்சமாக உயர்த்தப்படுகிறது. தொடக்க பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு ரூ.3.59 கோடி மதிப்பீட்டில் 1 செட் Shoe மற்றும் 2 செட் Socks வழங்கப்படும்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தண்ணீர் ஒழுகாமல் இருக்க வாட்டர் ப்ரூப் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை பள்ளிகள் மறுசீரமைப்பு பணிக்கு ரூபாய் 25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 21 பள்ளிகளுக்கு இந்த திட்டத்தால் பலன் கிடைக்கும்.
சென்னையில் 19 விளையாட்டு திடல்கள் ரூ.5 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாலம் இடிப்பு: சென்னையில் உள்ள முக்கியமான பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் அதே பகுதியில் கட்டப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்துள்ளார். அதன்படி சூளைமேடு, விருகம்பாக்கம் கால்வாய் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழைய பாலம் இடிக்கப்படும்.
ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கப்படும் என்று சென்னை பட்ஜெட்டில் மேயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வேறு பாலம் இடிப்பு: இது போக சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட வழித்தடங்கள் அமைக்கும் பணிகளுக்காக ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள அஜந்தா மேம்பாலம் இடிக்கும் பணி நேற்று நள்ளிரவில் தொடங்கியது. எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்காக அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இப்பணிகள் சுமார் ஒரு மாதத்திற்கு மேல் நடைபெறும் என மெட்ரோ நிர்வாகம் தகவல் வெளியிட்டு உள்ளது. இதனால் அங்கே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்ரோ சென்னை: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.

மெட்ரோ பாலம்: இதில் மாதவரம் மற்றும் தரமணி இடையே பாதை அண்டர் கிரவுண்ட் பாதையாகவும், சிறுசேரியில் உள்ள சிப்காட்டின் கடைசி நிலையம் வரை மேலே பாலம் அமைக்கப்பட்ட உயரமான பாதையாகவும் இருக்கும். அண்டர் கிரவுண்ட் பாதை அமைக்க அதிக நேரம் எடுக்கும். இன்னொரு பக்கம் மேலே பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாலம் இடிப்பு: இந்த கட்டுமானம் காரணமாக சென்னையில் பல்வேறு பாலங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக மயிலாப்பூரில் பாலம் ஒன்று இடிக்கப்பட உள்ளது., சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) திருமயிலை எம்ஆர்டிஎஸ் நிலையத்திற்கு எதிரே உள்ள பிரதான சாலையில் அமைந்துள்ள கல்வெர்ட் பாலத்தை இடிக்க முடிவு செய்துள்ளனர்.
கட்டம்-2 திட்டத்தின் ஒரு பகுதியாக சுரங்கப்பாதை அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதால் இந்த பாலம் இடிக்கப்பட உள்ளது. மந்தவெளி அல்லது கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து லஸ் சந்திப்புக்கு செல்லும் வாகன ஓட்டிகள் சுற்றுப் பாதையில் செல்ல வேண்டியிருக்கும். இடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு பதிலாக புதிய பாலம் அருகில் கட்டப்பட்டு அதன் மூலம் வாகன போக்குவரத்து மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications