Mayor Priya: மர்ம நபர் தொல்லை கொடுக்கிறார்.. சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மேயர் பிரியா பரபரப்பு புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து வாட்ஸ் அப்பில் தொல்லை கொடுத்து வருவதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார் அளித்துள்ளார். மேயர் பிரியா புகாரின் அடிப்படையில் சென்னை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அலுவலக எண்ணை தொடர்பு கொண்டு அடையாளம் தெரியாத நபர்கள் தொல்லை கொடுப்பதாகவும், வாட்ஸ் அப், பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி அவதூறாக சித்தரித்து பரப்புவதாகவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகாரில் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

Mayor Priya lodges complaint at Commissioner office alleging ha

மேயர் பிரியா புகார்

சென்னை மாநகராட்சி மேயராக இருந்து வருபவர் பிரியார். 32 வயதான இவர் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்திற்கு நேரில் வருகை தந்தார். அப்போது மேயர் பிரியா, கமிஷனர் அமல் ராஜ்ஜை சந்தித்து புகார் ஒன்றை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். என்னிடம் அடிக்கடி அவதூறாக பேசி வருகிறார்.

என்னுடையை பழைய வீடியோக்கள், பேட்டி அளிக்கும் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை சித்தரித்து வாட்ஸ் அப், பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி அவதூறாக சித்தரித்து பரப்புகிறார்கள். அலுவலக எண்ணுக்கு தொடர்புகொண்டு அடையாளம் தெரியாத நபர்கள் தொல்லை கொடுக்கின்றனர். எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது புகாரில் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

போலீசார் விசாரணை

மேயர் பிரியாவின் புகார் குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர். குறிப்பாக அவரது அலுவலக எண்ணுக்கு தொடர்புகொண்டது யார் என்றும், அந்த அடையாளம் தெரியாத நபர் யார் என்பது குறித்தும் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேயர் பிரியா கொடுத்த செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் மேயர் பிரியா இந்த புகார் அளிக்கும் போது அதற்கான வாட்ஸ் அப் குறுந்தகவல்கள், வீடியோக்கள், புகைப்படங்களையும் போலீசாரிடம் கொடுத்துள்ளார். இதை வைத்தும் அந்த அடையாளம் தெரியாத நபர் யார் என போலீசார் விசாரணை மேற்கொள்கின்றனர். மேயர் பிரியா தனக்கு அடையாளம் தெரியாத நபர் தொல்லை கொடுப்பதாக புகார் கொடுத்து இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+