மொத்தமாக மாறிய மேயர் பிரியா.. கேமராவை பார்த்ததுமே ஒரே வெட்கம்.. அசந்து பார்த்த சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா என்றாலே சேலை, எளிமையான அலங்காரம் என்ற தோற்றம்தான் பலருக்கும் நினைவுக்கு வரும்.. ஆனால் இன்று மாமன்றக் கூட்டத்துக்கு வந்தபோது அந்த வழக்கமான தோற்றத்தில் ஒரு சின்ன மாற்றம் இருந்தது. புதிய ஹேர்ஸ்டைலில், ஷார்ட்டான முடியுடன் ஸ்டைலான லுக்கில் வந்திருந்தார்.. இந்த நியூ லுக் போட்டோக்கள், வீடியோக்கள் சோஷியல் மீடியாவிலும் கவனம் வெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, 28 வயதில் இந்த பதவிக்கு வந்தவர். சென்னை மாநகராட்சியின் 3வது பெண் மேயர் என்ற பெருமையுடன், பட்டியலினத்தைச் சேர்ந்த முதல் பெண் மேயர் என்ற சிறப்பையும் பெற்றவர். வடசென்னையைச் சேர்ந்த பிரியா, 74-வது வார்டில் இருந்து கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டு 2022-ல் மேயரானார்.

Chennai Mayor Priya New Look

சென்னை மாநகராட்சி மேயர்

மேயராக பொறுப்பேற்றதிலிருந்தே பிரியா பல்வேறு மாநகராட்சி பணிகளில் கவனம் செலுத்தி வந்துள்ளார். மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்வது, மாநகராட்சிப் பள்ளிகளில் கல்வி சார்ந்த வசதிகளை மேம்படுத்துவது, பூங்காக்கள் மற்றும் சுகாதார நிலையங்களை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக பதிவுகள் உள்ளன.

ஆனால் அதேசமயம், பதவிக்காலத்தில் சில சர்ச்சைகளையும் அவர் எதிர்கொண்டதை மறுக்க முடியாது.. சோஷியல் மீடியாவில் தன்னைப் பற்றி அவதூறான தகவல்கள் பரப்பப்படுவதாகக் கூறி சென்னை கமிஷனரிடம் புகார் அளித்ததும் நினைவிருக்கலாம்.

பிரியா மாமன்ற செயல்பாடுகள்

அதேபோல, மேயர் பிரியாவைச் சுற்றி சில வீடியோக்களும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கு அவர் குடைபிடித்த காட்சி, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவரை ஒருமையில் அழைத்துப் பேசிய காட்சி, அப்போதைய முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் அவர் தொங்கியபடி பயணித்த காட்சி என அடுத்தடுத்து விமர்சனங்கள் எழாமல் இல்லை.. அதற்கெல்லாம் பிரியா, முறையான விளக்கங்களையே தந்திருக்கிறார்.

இப்படி பிரியாவைச் சுற்றி அரசியல், மாநகராட்சி பணிகள், சர்ச்சைகள் என பல விஷயங்கள் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், இன்று அவர் மாநகராட்சி கூட்டத்துக்கு வந்த தோற்றமும் ஸ்பெஷல் கவனம் பெற்றுள்ளது..

பிரியாவின் புதிய லுக்

பெரும்பாலும் பாரம்பரிய சேலை அணிந்த தோற்றத்திலேயே, பொது மேடைகளிலும் மாமன்றக் கூட்டங்களிலும் வலம் வருபவர் பிரியா.. அரசு முறை நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற வகையில் நெற்றியிலும் கழுத்திலும் எளிமையான அலங்காரங்களுடன் காட்சி தருவார்..

ஆனால், இன்று வழக்கமான தோற்றத்திலிருந்து சற்று வித்தியாசமாக, புதிய ஹேர்ஸ்டைலில், முடியை ஷார்ட்டாகவும் ஸ்டைலாகவும் வைத்தபடி வந்திருந்தார் பிரியா.

கேமராக்கள் அவரைச் சுற்றிலும் பளிச்சிட, முகமெல்லாம் சிரிப்பு பொங்கியது. தன்னை மீடியாக்கள் வீடியோ எடுப்பதை பார்த்ததும் லேசாக வெட்கப்பட்டார். கேமராவை பார்த்து தயங்கித் தயங்கிச் சிரித்தபடியே மாமன்றத்துக்கு நடந்து வந்தார்.

ஒரு கட்டத்தில் கையை முகத்தில் வைத்துக்கொண்டே மாமன்றத்துக்குள் நுழைந்தார்... சிறிது நேரத்தில், மேயருக்குரிய கருப்பு அங்கியை அணிந்தபடி மாமன்றக் கூட்டத்தை நடத்தினார்.. எனினும் இந்த பிரியாவின் புதிய ஹேர்ஸ்டைல் மற்றும் வித்தியாசமான லுக், சோஷியல் மீடியாவிலும் க்யூட்டாக கவனம் ஈர்த்து வருகிறது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+