சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்லாரும் சமம்னா யாரு சார் ராஜா?.. உதய் அண்ணாவின் ஃபயர் பெர்ஃபாமன்ஸ்.. மேயர் பிரியா பாராட்டு

Google Oneindia Tamil News

சென்னை: சேப்பாக்கம் எம்எல்ஏவும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் அனல் பறப்பதாக சென்னை மேயர் பிரியா பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இந்தியில் ஆயுஷ்மன் குரானா நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான ஆர்ட்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் பெற்றிருந்தார்.

லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தயார்..காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்ட 3 குழுக்கள் அமைத்த சோனியா லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தயார்..காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்ட 3 குழுக்கள் அமைத்த சோனியா

இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. இதற்கு நெஞ்சுக்கு நீதி என பெயரிப்பட்டது. இந்த படத்தை ராஜா காமராஜ் இயக்கினார். இதில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்தார்.

கருணாநிதி எழுதிய புத்தகம்

கருணாநிதி எழுதிய புத்தகம்

தனது தாத்தா கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி எனும் புத்தகத்தின் பெயரே உதயநிதியின் படத்திற்கும் வைக்கப்பட்டது. இதனால் இந்த படத்தை பார்த்து பார்த்து நடித்தார் உதய். பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இந்த படம் வெளியானது. மிகவும் அழுத்தமான கதை என்பதால் இந்த படத்திற்கு பாராட்டுகள் குவிகின்றன.

பிரியாணி

பிரியாணி

இந்த படத்தை பார்ப்பதற்காக திமுகவினர் சில தியேட்டர்களில் இலவச டிக்கெட்டுகளையும் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படம் பார்ப்போருக்கு பிரியாணி, கூல்டிரிங்ஸ், ஸ்னாக்ஸ் என சரியான கவனிப்பாம். இந்த படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் உதயநிதி நடித்துள்ளார்.

மேயர் பாராட்டு

மேயர் பாராட்டு

இந்த படத்தை முதல்வரும் உதயநிதியின் தந்தையுமான ஸ்டாலின் பார்வையிட்டு அந்த குழுவினரை பாராட்டியிருந்தார். இந்த படத்தை பார்க்குமாறு திமுகவினர் வலியுறுத்துவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பாராட்டியுள்ளார்.

 உதய் அண்ணாவின் அனல் பறக்கும் நடிப்பு

உதய் அண்ணாவின் அனல் பறக்கும் நடிப்பு

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் எல்லோரும் சமம்னா யாரு சார் ராஜா?' என்ற படத்தின் டயலாக்கை குறிப்பிட்டு, உதயநிதி அண்ணனின் நடிப்பு நெருப்பாக இருந்தது. கதையை பரபரப்பாக இயக்குனர் அருண்ராஜா காமராஜ் சொல்லியுள்ளார். பார்ப்பதற்கு அற்புதமான படம். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

English summary
Chennai Corporation Mayor Priya praises Udhayanidhi Stalin's Nenjukku Needhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X