ஓட்டு மையை காமிங்க.. சிக்கன் கிலோவுக்கு ரூ. 50 தள்ளுபடியை அள்ளிக்கிட்டு போங்க.. சென்னையில் அதிரடி
சென்னை: தேர்தலில் வாக்களித்தால் சிக்கன் கிலோவுக்கு ரூ. 50 தள்ளுபடியை பெற்றுக் கொள்ளுமாறு கறிக் கடை உரிமையாளர் ஒருவர் விளம்பரம் செய்துள்ளார்.
100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. அது போல் அந்தந்த மாநில அரசுகளும் தேர்தல் ஆணைய அதிகாரிகளும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவது வாடிக்கையாகும்.

விளம்பரங்கள்
அரசு இயந்திரத்தை தாண்டி சமூக ஆர்வலர்களும் ஆங்காங்கே மக்கள் கூடும் இடங்களில் வாக்களிப்பதன் அவசியத்தை கூறுவதுண்டு. அதுபோல் சினிமா பிரபலங்களும் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளம்பரங்களில் நடிப்பதும் வழக்கமாகிவிட்ட ஒன்றாகும்.

விளம்பரம்
இந்த நிலையில் சென்னையில் இறைச்சிக் கடைக்காரர் ஒருவர் இதுபோல் வாக்களிப்பதன் அவசியத்தை மக்கள் உணர கவர்ச்சிகர விளம்பரத்தை அளித்துள்ளார்.

அயனாவரம் கடைக்காரர்
தேர்தலில் வாக்களித்து வந்து அந்த மையை காட்டினால் சிக்கன் கிலோவுக்கு ரூ .50 தள்ளுபடி செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார். இவர் அயனாவரத்தை சேர்ந்த கடைக்காரர் ஆவார்.

வாக்குப் பதிவு
தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இறைச்சிக் கடை உரிமையாளரின் இந்த விளம்பரம் வாக்குப் பதிவின் அவசியத்தை உணர்த்துவதாக உள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications