சென்னை மேடவாக்கம் மின்சாதன விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து - பொருட்கள் எரிந்து நாசம்

சென்னையை அடுத்த மேடவாக்கம் - மாம்பாக்கம் பிரதான சாலையில் உள்ள தனியார் மின்சார விற்பனை கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் கடையில் உள்ள பொருட்கள் கொழுந்துவிட்டு எரிந்து நாசமாயின.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை அடுத்த மேடவாக்கம் - மாம்பாக்கம் பிரதான சாலையில் உள்ள தனியார் மின்சாதன பொருட்கள் விற்பனை கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்த தீயினால் கடையில் உள்ள பொருட்கள் நாசமாயின. மேடவாக்கம், தாம்பரம், வேளச்சேரி பகுதிகளை சேர்ந்த 3 தீயணைப்பு வாகனத்தில் வந்த 30 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Recommended Video

    சென்னை மேடவாக்கம் மின்சாதன விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து - பொருட்கள் எரிந்து நாசம்

    மேடவாக்கம் - மாம்பாக்கம் பிரதான சாலையில் உள்ளது துரை ஹார்டுவேர்ஸ். இந்த கடையில் மின்சார பல்புகள், வயர், மின்விசிறி, இன்வர்ட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. நள்ளிரவு நேரத்தில் இந்த கடையில் திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென பொருட்கள் மீது பரவி கடை முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிய துவங்கியது.

    Chennai Medavakkam Electricity Store fire accident

    தகவல் அறிந்த மேடவாக்கம், தாம்பரம், வேளச்சேரி ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 தீயணைப்பு வாகனத்தில் வந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி முயற்சித்தும் தீயை அணைக்க முடியாத சூழலில் அருகில் உள்ள மற்றொரு கடைக்கும் தீ பரவியது. மேலும் அங்கு ஏற்பட்ட தீ விபத்திலிருந்து வெளியேறிய கரும்புகை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கண்ணெரிச்சலை உண்டாக்கியது.

    மூன்று தீயணைப்பு வாகனங்களில் கொண்டு வந்த தண்ணீர் தீர்ந்து போன நிலையில் சாலையில் சென்ற தண்ணீர் லாரிகளை மடக்கி அதிலிருந்து தண்ணீரை தீயணைப்பு வாகனத்திற்கு எடுத்து தீயை அணைத்தனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப்பிறகு தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    கடையை மூடிய சிறிது நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் கடை ஊழியர்கள், உரிமையாளர் என யாருக்கும் எந்த தீக்காயமும், உயிர் சேதமும் இல்லை, மேலும் அருகில் உள்ள கட்டிடங்களுக்கும் தீ பரவியது. அங்கிருந்தவர்கள் நிலைமை அறிந்து கட்டிடத்தில் இருந்து வெளியேறியதால் எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

    தீயில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இரவு நேரத்தில் திடீரென மின்சாதன விற்பனைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+