Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“டுவிஸ்ட்”.. புயல் வருது.. அரபிக் கடலில் அலர்ட்! இன்னும் 12 மணி நேரம்தான் - வானிலை மையம் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "நேற்று (05.06.2023) மாலை 05:30 மணி அளவில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது இன்று (06.06.2023) காலை 05:30 மணி அளவில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே இடத்தில் நிலவுகிறது.

Chennai MET alerted that Cyclone is to be formed in Arabian sea withing 12 hours

இது வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும். தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். தமிழக உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

புடலூர் (தஞ்சாவூர்) 10, வேப்பூர் (கடலூர்), நன்னிலம் (திருவாரூர்), பண்ருட்டி (கடலூர்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) தலா 7, வேதாரண்யம் (நாகப்பட்டினம்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), கோடியக்கரை (நாகப்பட்டினம்) தலா 6, நந்தியார் (திருச்சி), முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) தலா 5, சூரப்பட்டு (விழுப்புரம்), KVK காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), நாகப்பட்டினம், நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), திருவையாறு (தஞ்சாவூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), கீழச்செருவாய் (திருவள்ளூர்), கும்பகோணம் (தஞ்சாவூர்) தலா 4, புள்ளம்பாடி (திருச்சி), காரியபட்டி (விருதுநகர்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), செட்டிக்குளம் (பெரம்பலூர்), பெரம்பலூர், மன்னார்குடி (திருவாரூர்), குருங்குளம் (தஞ்சாவூர்), திருமானூர் (அரியலூர்), ஆனந்தபுரம் (விழுப்புரம்), காரையூர் (புதுக்கோட்டை), தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), ஆவடி (திருவள்ளூர்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), கேதார் (விழுப்புரம்), தஞ்சாவூர் PTO, விழுப்புரம், பாடாலூர் (பெரம்பலூர்), திருப்புவனம் (சிவகங்கை), பெருந்துறை (ஈரோடு), கங்கவல்லி (சேலம்), காரைக்கால் தலா 3 கஞ்சனூர் (விழுப்புரம்), கள்ளக்குறிச்சி, மேலூர் (மதுரை), வல்லம் (தஞ்சாவூர்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), ஆத்தூர் (சேலம்), வளவனூர் (விழுப்புரம், அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), அரியலூர், மணம்பூண்டி (விழுப்புரம்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), புதுச்சேரி, கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), நெமூர் (விழுப்புரம்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), அருப்புக்கோட்டை (விருதுநகர்), லக்கூர் (கடலூர்), தஞ்சாவூர், கோலியனூர் (விழுப்புரம்), மணல்மேடு (மயிலாடு), திரூர் KVK AWS (திருவள்ளூர்), கடலூர், திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) தலா 2, திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), முகையூர் (விழுப்புரம்), கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), பாலமோர் (கன்னியாகுமரி), தலைவாசல் (சேலம்), கச்சிராயப்பாளையம் (கள்ளக்குறிச்சி), கொடைக்கானல் (திண்டுக்கல்), கரூர், வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), துவாக்குடி (திருச்சி), கோவில்பட்டி (திருச்சி), எமரலாடு (நீலகிரி), அகரம் சீகூர் (பெரம்பலூர்), பொன்னமராவதி (புதுக்கோட்டை), கீரனூர் (புதுக்கோட்டை), ஆரணி (திருவண்ணாமலை), வானமாதேவி (கடலூர்), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்), அழகரை எஸ்டேட் (நீலகிரி), கொரட்டூர் (திருவள்ளூர்), வத்திராயிருப்பு (விருதுநகர்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), மருங்காபுரி (திருச்சி), மயிலாடுதுறை, திருக்கோவிலூர் ARG (கள்ளக்குறிச்சி), ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), அரசூர் (விழுப்புரம்), பெலாந்துறை (கடலூர்), செஞ்சி (விழுப்புரம்), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), விருதாச்சலம் (கடலூர்), மரக்காணம் (விழுப்புரம்), மதுரை தெற்கு, மதுரை வடக்கு, விருதுநகர் (விருதுநகர்), மேட்டுப்பட்டி (மதுரை), வடகுத்து (கடலூர்), விருதாச்சலம் KVK (கடலூர்), திருக்குவளை (நாகப்பட்டினம்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), குன்னூர் (நீலகிரி), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), தானியமங்கலம் (மதுரை), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), குன்னூர் PTO (நீலகிரி), காஞ்சிபுரம், பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 1." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+