பிரிபிரின்னு பிரிச்சு மேயப்போகும் கனமழை.. 13 மாவட்டங்களுக்கு அலர்ட்! சென்னையிலும் சான்ஸ் இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Chennai Met has informed that 13 districts of Tamil Nadu are likely to experience heavy rain

02.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 03.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

04.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

05.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 06.11.2023 மற்றும் 07.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): செங்கோட்டை (தென்காசி), திருச்செந்தூர் (தூத்துக்குடி), சேர்வலாறு அணை (திருநெல்வேலி) தலா 4, RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), பாபநாசம் (திருநெல்வேலி), காரைக்கால், மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை), கொரட்டூர் (திருவள்ளூர்), மண்டலம் 07 வானகரம் (சென்னை), குந்தா பாலம் (நீலகிரி), வந்தவாசி (திருவண்ணாமலை), மண்டலம் 06 கொளத்தூர் (சென்னை), கின்னக்கோரை (நீலகிரி), குண்டாறு அணை (தென்காசி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), பர்லியார் (நீலகிரி), கடம்பூர் (தூத்துக்குடி), கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி) தலா 3, குன்னூர் (நீலகிரி), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), பெருந்துறை (ஈரோடு), திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி), சிவலோகம் (கன்னியாகுமரி), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), கோயம்புத்தூர் விமான நிலையம் , கெத்தை (நீலகிரி), அம்பத்தூர் (சென்னை), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), வேப்பூர் (கடலூர்), குன்னூர் PTO (நீலகிரி), கீழச்செருவை (கடலூர்), தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), அண்ணாமலை நகர் (கடலூர்), சிதம்பரம் AWS (கடலூர்), மணிமுத்தாறு (திருநெல்வேலி), மண்டலம் 1 D156 முகலிவாக்கம் (சென்னை), விருதுநகர் AWS (விருதுநகர்), சிதம்பரம் (கடலூர்), அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), மண்டலம் 03 மாதவரம் (சென்னை), நத்தம் (திண்டுக்கல்), DSCL கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), திருக்குவளை (நாகப்பட்டினம்), TNAU கோயம்புத்தூர் (கோயம்புத்தூர்), மண்டலம் 03 புழல் GCC (திருவள்ளூர்) தலா 2, சிவகாசி (விருதுநகர்), திருவள்ளூர், மானாமதுரை (சிவகங்கை), கோயம்புத்தூர்-தெற்கு (கோயம்புத்தூர்), கடனா அணை (தென்காசி), பேரையூர் (மதுரை), சீர்காழி (மயிலாடுதுறை), மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு), செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), ஆனைப்பாளையம் (கன்னியாகுமரி), கொள்ளிடம் (மயிலாடுதுறை), பூண்டி (திருவள்ளூர்), எம்ஜிஆர் நகர் (சென்னை), செம்பரபாக்கம் (காஞ்சிபுரம்), மண்டலம் U32 மதுரவாயல் (சென்னை), மேட்டுப்பட்டி (மதுரை), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), DSCL கீழ்படி (கள்ளக்குறிச்சி), மணல்மேடு (மயிலாடுதுறை), எறையூர் (பெரம்பலூர்), ஊத்துக்குளி (திருப்பூர்), மாஞ்சோலை (திருநெல்வேலி), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), பேராவூரணி (தஞ்சாவூர்), திருச்சிராப்பள்ளி நகரம், RSCL-2 நேமூர் (விழுப்புரம்), செங்குன்றம் (திருவள்ளூர்), RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), ஆவடி (திருவள்ளூர்), ஊத்து (திருநெல்வேலி), தென்காசி, மொடக்குறிச்சி (ஈரோடு), மண்டலம் 02 மணலி (சென்னை), ஆயின்குடி (புதுக்கோட்டை), மண்டலம் 08 அண்ணாநகர் (சென்னை), பெரம்பூர் (சென்னை), திருவண்ணாமலை, பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), மரக்காணம் (விழுப்புரம்), நாலுமுக்கு (திருநெல்வேலி), கேத்தி (நீலகிரி), மயிலம்பட்டி (கரூர்), காக்காச்சி (திருநெல்வேலி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), மண்டலம் 10 கோடம்பாக்கம் (சென்னை), புழல் ARG (திருவள்ளூர்), மண்டலம் 05 ராயபுரம் (சென்னை), சூலூர் (கோயம்புத்தூர்), அழகரை எஸ்டேட் (நீலகிரி), ஆயிக்குடி (தென்காசி), RSCL-2 கெடார் (விழுப்புரம்), டிஜிபி அலுவலகம் (சென்னை), திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சிராப்பள்ளி), ஒட்டன்சத்திரம் (தர்மபுரி), திருத்தணி PTO (திருவள்ளூர்), பல்லடம் (திருப்பூர்), காயல்பட்டினம் (தூத்துக்குடி), திருவூர் AWS (திருவள்ளூர்), கடல்குடி (தூத்துக்குடி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), கடலூர், களக்காடு (திருநெல்வேலி) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை. மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+