இருக்கு.. இன்னைக்கும் மழை இருக்கு.. கோவையன்ஸ் உஷார்! இடி மின்னலுடன் கொட்டுமாம்! ஜூலை 15 வரை ட்ரீட்
சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் 15 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நீலகிரி, கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 11 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 13ல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 14ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 15 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
தேவகோட்டை (சிவகங்கை) 6, சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்) தலா 5, விழுப்புரம், வானூர் (விழுப்புரம்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), சின்கோனா (கோயம்புத்தூர்) தலா 4, தேவாலா (நீலகிரி), அவலாஞ்சி (நீலகிரி), வொர்த் எஸ்டேட் (நீலகிரி), அறந்தாங்கி (புதுக்கோட்டை), கூடலூர் பஜார் (நீலகிரி), சோலையார் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), லப்பைக்குடிகாடு பெரம்பலூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), மேல் கூடலூர் (நீலகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 3, ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), நகுடி (புதுக்கோட்டை), காரைக்குடி (சிவகங்கை), புதுச்சேரி, ஏற்காடு (சேலம்), திருப்பத்தூர் (சிவகங்கை), மேல் பவானி (நீலகிரி), பார்வூட் (நீலகிரி), எறையூர் (பெரம்பலூர்) தலா 2, தொழுதூர் (கடலூர்), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), திருவாடானை (ராமநாதபுரம்), முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), கடவனூர் (கள்ளக்குறிச்சி), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை (கல்லூரி), சேலம், ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி), செங்கம் (திருவண்ணாமலை), பெரியார் (தேனி), ஆர்.எஸ்.மங்கலம் (இராமநாதபுரம்), க்ளென்மார்கன் (நீலகிரி), ஒகேனக்கல் (தருமபுரி), அடவினைனார்கோயில் அணை (தென்காசி), மஞ்சளார் (தேனி), புது வேட்டக்குடி (பெரம்பலூர்), திருப்போரூர் (செங்கல்பட்டு), தேக்கடி (தேனி), காரைக்கால், ஆயின்குடி (புதுக்கோட்டை), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), தஞ்சாவூர் (இராணிப்பேட்டை), புலிப்பட்டி (மதுரை), தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), எறையூர் (கள்ளக்குறிச்சி), சிவகிரி (தென்காசி), வளவனூர் (விழுப்புரம்),), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), கோலியனூர் (விழுப்புரம்), நடுவட்டம் (நீலகிரி), கள்ளக்குறிச்சி தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக்கடல் பகுதிகள்: இன்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
12.07.2023: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்
13.07.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வடதமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்: 12.07.2023 மற்றும் 13.07.2023: இலட்சத்தீவு பகுதிகள், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications